கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தந்தையின் பென்சனை கேட்டு வந்த பானுப்பிரியா.. இப்படியா ஆகணும்
கோவை: கோவை அருகே உள்ள வடமதுரை அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் குடிநீர் பிரிவில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் காலமாகி விட்ட நிலையில், பென்சனுக்காக அவரது மனைவி ராஜேஸ்வரியும், மகள் பானுபிரியாவும் கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.. அப்போது யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.
கோவை அருகே வடமதுரை அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முதியவர் ராமமூர்த்தி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுடைய மகள் பானுபிரியாவுக்கு 36 வயது ஆகிறது. இவருக்கு திருமணமாகிவிட்டது. இவரது கணவர் பெயர் ராஜ்குமார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

பானுபிரியாவின் தந்தை ராமமூர்த்தி கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் குடிநீர் பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். தனது கணவர் இறந்ததால், பென்சன் தொடர்பாக கேட்பதற்காக ராஜேஸ்வரி மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்ல விரும்பினார்.
ராஜேஸ்வரிக்கு உதவியாக அவரது மகள் பானுபிரியாவும் நேற்று முன்தினம் கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். தாய் மகள் இருவரும், கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு சென்றனர். அங்குள்ள முதல் மாடியில்தான் பென்சன் பிரிவு செயல்படுகிறது. அப்போது பானுபிரியா தனது தாய் ராஜேஸ்வரியிடம் நீங்கள் கீழே நில்லுங்கள், நான் முதல் மாடியில் உள்ள அலுவலகத்துக்கு சென்று கேட்டு விட்டு வருகிறேன் என்று கூறிச் சென்றுள்ளார்.
அங்கு சென்றதும் அதிகாரிகளை சந்தித்து பென்சன் தொடர்பாக கேட்டுள்ளார் பானுப்பிரியா. அதற்கு அவர்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். உடனே அந்த ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிப்பதாக கூறிவிட்டு பானுப்பிரியா புறப்பட்டுள்ளார். அப்போது கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து சில அடி தூரம் தான் நடந்து சென்றிருப்பார் பானுப்பிரியா.. அப்போது திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர் மயங்கி அப்படியே பின்புறமாக சரிந்து விழுந்தார். இதில் அவருடைய பின்னந்தலையில் பலமாக அடிபட்டு விட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஏற்கனவே பானுபிரியா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த உக்கடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தந்தையின் பென்சன் தொடர்பாக விசாரிக்க சென்றபோது மகள் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த பானுபிரியாவின் மருத்துவ அறிக்கை தொடர்பாக ஆய்வு செய்ததில் அவருக்கு எந்த நோயும் இல்லை என கூறப்படுகிறது. திடீரென மயங்கி விழுந்து தலையில் அடிப்பட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications