இதுமட்டும் நடந்தால் திமுகவிற்கு ஜாக்பாட்தான்! "ராஜா" சத்தமின்றி ஸ்மார்ட் வேலை! கோவையில் களம் மாறுதே

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் திமுகவின் அமைச்சர் டிஆர்பி ராஜா தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். இவர் சத்தமின்றி செய்யும் ஸ்மார்ட் வேலைகள் அங்கே கள நிலவரத்தை மாற்ற தொடங்கி உள்ளதாம்.

கோவை லோக்சபா தேர்தல் களம் தற்போது சூடு பிடித்து உள்ளது. கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

What is the ground reality in Coimbatore Lok Sabha election DMK vs AIADMK vs Annamala

அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸ் தேர்வாகி மாறி உள்ளார்.

2019 பொதுத் தேர்தல். கோவையில் அதிமுக + பாஜக + பாமக +தேமுதிக + தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து வாங்கிய வாக்குகள் 31% மட்டுமே. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாங்கியது 46%. இப்போது திமுக கூட்டணி அப்படியே உள்ளது.

ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக , தேமுதிக இல்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் சேர்ந்திருக்கு. இவர்களிடம் 11% வாக்கு வேறு கோவையில் உள்ளது. அப்படி இருக்க அண்ணாமலைக்கு கோவை களநிலவரம் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சரி இந்த தேர்தலில் அங்கே கள நிலவரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

அதிமுகவிற்கு சாதகம் எது?: கோவையில் அதிமுகவிற்கு சாதகம் என்று பார்த்தால் அது வேட்பாளர்தான். அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டது பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அதிமுக சில தொகுதிகளில் டம்மி வேட்பாளர்களை களமிறக்கி உள்ளதாக திமுகவினர் விமர்சனம் வைத்துள்ளனர். அதாவது பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் விதமாக அதிமுக சில தொகுதிகளில் டம்மி வேட்பாளர்களை களமிறக்கி உள்ளதாக திமுகவினர் புகார் வைக்கின்றனர். இப்படி இருக்க கோவையில் மிக கடினமான வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதிலும் சிங்கை ராமச்சந்திரன் கோவையில் அதிமுகவின் அடையாளமாக உள்ள எஸ் பி வேலுமணிக்கு நெருக்கம். சிங்கை ராமச்சந்திரனை எஸ் பி வேலுமணியின் குட் புக்கில் இருப்பவர். இவரின் தேர்வே எஸ் பி வேலுமணியின் முடிவாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது. அப்படி இருக்க அவர் கண்டிப்பாக இவருக்காக தீவிரமாக களப்பணிகளை செய்வார். சிங்கை ராமச்சந்திரனை வெற்றிபெற வைக்க எஸ் பி வேலுமணி கண்டிப்பாக கடினமான பணிகளை செய்கிறார். ஒரு பக்கம் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதால் இந்த தேர்தலை அதிமுக நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தீவிரமாக பணிகளை செய்ய தொடங்கி உள்ளது.

முக்கியமாக வேலுமணி நேரடியாக களத்தில் இறங்கி தனது பழைய ஸ்டைலில் பணிகளை செய்வது திமுகவிற்கு சாதகமாக அலையை திருப்ப தொடங்கி உள்ளது.

அண்ணாமலைக்கு சாதகம் எது?: அண்ணாமலைக்கு சாதகம் என்றால்.. பாஜகவிற்கு சாதகமாக உள்ள 2-3 சதவிகித உறுதியான வலதுசாரி வாக்குகள். சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஒரு காலத்தில் வந்த வாக்குகள், வானதிக்கு கடந்த சட்டசபை தேர்தலில் வந்த வாக்குகள் ஆகிய வாக்குகளை வைத்து அண்ணாமலைக்கு கொஞ்சம் சாதகமான சூழல் உள்ளது.

அண்ணாமலை புதிய ஆள், பாஜக தேசிய அளவில் வெல்லும் பட்சத்தில் அமைச்சர் ஆகும் வாய்ப்பு, மோடி நேரடியாக வந்து பிரச்சாரம் செய்வது, ஆகியவை சாதகமாக மாறி உள்ளது. டவுன் ஹால் உள்ளிட்ட சிட்டி உள்ளே இருக்கும் பகுதிகளில் தீவிர பாஜக ஆதரவு உள்ளது. கோவை தெற்கில் நகர பகுதிகளில் பாஜகவிற்கு ஆதரவான சூழல் உள்ளது. இது போக கோவை தெற்கு தொகுதியில் உள்ள சில வட மாநில மக்கள் அண்ணாமலைக்கு சாதகமாக இருப்பார்கள் என்பதும் பாஜகவிற்கு சாதகம்.

திமுகவிற்கு எது சாதகம்?: கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சத்தமின்றி அங்கே களப்பணிகளை செய்து வருகிறார்.

இவர் மீடியாக்களில் அதிகம் தோன்றாமல் தீவிரமாக களப்பணிகளை செய்து வருகிறார். உதாரணமாக கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு டவுன்ஹால் கோட்டைமேடு பகுதியில் உள்ள: 1.கோட்டை ஹிதாய்யத்துல் இஸ்லாம் சாஃபியா ஜமாத்
2. தரிக்கத்துல் இஸ்லாம் ஷாபியா ஜமாத்
3. கோட்டை கேரளா ஜமாத்
4. கோட்டை வின்சென்ட் ரோடு முஸ்லிமின் பள்ளிவாசல் பகுதிகளுக்கு சென்று பேசினார்.

அதன்பின் காலை கோவையைச் சார்ந்த பிரபல தொழில் அதிபர் ஓ. ஆறுமுகசாமியை சந்தித்து ஆதரவு கோரினார். இது போக செயல் வீரர்கள் கூட்டமும் நடந்தது.

பொதுவாக தேர்தலில் ஜெயிக்க மீடியா பலத்தை விட.. நேரடியாக களத்தில் பணிகளை செய்வது முக்கியம். அப்படித்தான் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அங்கே உள்ள அமைப்புகள், பிரிவுகள், தொழிற்சங்கங்களை நேரில் சந்தித்து ஆலோசனைகளை செய்து வாக்கு சேகரித்து வருகிறார். பெரிதாக செய்திகளில் தோன்றாமல் நேரடியாக களப்பணிகளை செய்து வருகிறார். அங்கே வாக்குகளை பெரிய அளவில் தீர்மானிக்கும் சங்கங்கள், அமைப்புகளை சந்தித்து கணபதி ராஜ்குமார் வாக்குகளை கேட்டு வருகிறார்.

அதன் ஒரு கட்டமாக கோவை சூலூரில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர். இவர்களின் ஆதரவு மொத்தமாக திமுகவிற்கு செல்லும் என்பதால் மிகப்பெரிய வாக்கு வங்கி இங்கே சாதகமாக திரும்பும் வாய்ப்புகள் உள்ளன.

டிஆர்பி ராஜா சம்பவம்: இங்கே நேரடியாக டிஆர்பி ராஜா களமிறங்கி மிக தீவிரமாக பணிகளை செய்து வருகிறார். அங்கே திமுக நிர்வாகிகள் இடையே இது ஒரு வித ஒற்றுமையை புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக இவர் ஸ்மார்ட்டாக செயல்பட்டு அதிமுக - பாஜக மோதலால் பிரியும் வாக்குகளை குறி வைக்க தொடங்கி உள்ளார்.

முக்கியமாக அங்கே ஒரு ஜாதியின் வாக்குகள் அதிமுக - பாஜக இடையே பிரியும். இந்த நிலையில் தலித் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள், கேரளாவில் இருந்து வந்தவர்களின் வாக்குகள், அந்த குறிப்பிட்ட ஜாதிக்கு வெளியே இருக்கும் வாக்குகள் மூலம் வெல்ல முடியும் என்பதை குறி வைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது.

கோவையில் திமுகவின் பலம் தொடர்பாக நம்மிடையே பேசிய திமுகவினர், கோவையில் செந்தில் பாலாஜி கொடுத்த பிளான்படி பணிகள் நடக்கின்றன. அதிமுக, பாஜக வலுவாக இருந்தால் அங்கே மாநகராட்சி தேர்தலில் ஒன்றிலாவது வென்று இருக்க வேண்டுமே? ஏன் இல்லை. இதை திமுக பார்க்கிறது. அதனால்தான் கோவையில் நேரடியாக களமிறங்குகிறது. சேலத்திலும், களமிறங்குகிறது. பொள்ளாச்சியிலும் மீண்டும் களமிறங்கி உள்ளனர். கோவையில் செந்தில் பாலாஜி இல்லாமலே வெற்றிபெறுவோம்.. அவரை நீங்கள் சிறையில் போட்டுவிட்டீர்கள். அதனால் எங்கள் கட்சி தோல்வி அடையும் என்று நினைக்க வேண்டாம், என்றுள்ளார்.

நாம் தமிழர் பிரிக்கும் வாக்கு?: இது போக நாம் தமிழர் பிரிக்கும் வாக்குகள் காரணமாக இங்கே கணிசமான வாக்குகள் எதிர்க்கட்சிகள் இடையே சிதறும். இது திமுகவிற்கு சாதகமாக மாறும். இப்போதைக்கு அங்கே கள நிலவரம் திமுக vs அதிமுக என்றுதான் உள்ளது. சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம் என திராவிட இயக்கங்களின் கோட்டை தான். இதுதான் முடிவை தீர்மானிக்கும் என்பதால் அங்கே கள நிலவரம் திமுக vs அதிமுக என்றுதான் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+