Wait And See.. லோக்சபாவில் திமுக எம்பிக்கள் செய்யப்போகும் சம்பவம்.. சஸ்பென்ஸ் உடைத்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

கோவை: நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் கேன்டீனில் வடை தான் சாப்பிட போகிறார்கள் என பாஜகவினர் விமர்சனம் செய்ததற்கு Wait And See எனக்கூறி நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் செய்யப்போகும் சம்பவம் தொடர்பான சஸ்பென்ஸை முதல்வர் ஸ்டாலின் உடைத்தார்.

கோவையில் திமுகவின் முப்பெரும் விழா நடந்து வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடந்து வருகிறது.

mk stalin covai coimbatore dmk

இந்த விழாவில் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். கூட்டணி கட்சி தலைவர்களின் பேச்சை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

2023ல் நடந்த எனது பிறந்தநாள் கூட்டத்திலேயே காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரைசேராது என்று மேடையில் அறிவித்தேன். அகில இந்திய அளவில் பாஜகவை தணிமைப்படுத்தினால் தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறினேன். நாட்டின் எதிர்காலம், ஜனநாயகம் தான் முக்கியம் என்று கூறினோம். அதனால் தான் 28 கட்சிகளை இணைத்து ‛இந்தியா' கூட்டணி உருவானது. நாம் ஒன்று சேர மாட்டோம் என்று நினைத்த பாஜகவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே இந்த கூட்டணி ஒன்று சேரக்கூடாது என்று ஒவ்வொரு கட்சிகளையும் ஐடி, இடி, சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டினார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வங்கி கணக்குகளை முடக்கினார்கள். டெல்லி, ஜார்கண்ட் முதல்வர்களை கைது செய்தனர்.

அதன்பிறகு தேர்தல் அறிவித்த பிறகும் கூட பாஜக என்னவெல்லாம் செய்தார்கள். விதிகளை மீறி மக்களிடையே பிரிவினை உண்டாக்கும் வகையில் பிரசாரம் செய்தனர். சிறுபான்மை சமுதாயத்தினரை தரக்குறைவாக பேசினார்கள். உத்தர பிரதேசத்திலும், ஒடிசாவிலும் தமிழர்களை கொச்சைப்படுத்தினர். ஏராளமான பொய் செய்தி, அவதூறுகளை பலகோடி ரூபாய் செலவில் வாட்ஸ்அப்பில் பரப்பினார்கள். இவ்வளவு செய்தும் பாஜக வாங்கியது 240 தான். இந்த 240 மோடியின் வெற்றி அல்ல. மோடியின் தோல்வி.

அருமை நண்பர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவிக்காவிட்டால் அவர்களுக்கு மெஜாரிட்டி ஏது. அவர்களால் தான் மோடி இன்று பிரதமராக இருக்கிறார். நாம் நம்பிய அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம் தான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. 237 உறுப்பினர்கள் பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உட்கார்ந்து உள்ளோம். பாஜக நினைத்தை செய்ய முடியாது. இப்போது கூட 40 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று என்ன செய்ய போகிறார்கள் என்று சில அதிமேதாவிகள் கேட்கின்றனர். அவர்கள் யார் என்றால் தங்களை தாங்களே அறிவாளிகள் என்று நினைத்து கொள்பவர்கள். ஜனநாயகத்தின் அடிப்படை என்ன என்பது அவர்களுக்கு தெரியுமா.

இப்படி கேள்வி கேட்டு அவர்கள் நாட்டு மக்களை தான் இழிவுப்படுத்துகிறார்கள். 40 பேர் போய் வடை சாப்பிட போகிறார்கள் என்று சிலர் சொல்கின்றனர். வாயால் வடை சுடுவது எல்லாம் உங்களின் வேலை. எங்கள் எம்பிக்கள் கருத்தால் உங்களின் ஆணவத்தை சுடுவார்கள். வெயிட் அண்ட் சீ. இதுக்கும் ஒரு எடுத்துக்காட்டு சொல்லட்டுமா. கடந்த 5 ஆண்டுகளில் நமது எம்பிக்கள் 9685 கேள்விகள் கேட்டுள்ளனர். 1949 விவாதங்களில் பங்கேற்றுள்ளனர். 59 தனிநபர் மசோதாக்கள் கொண்டு வந்துள்ளனர். ஒன்றிய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஏன் பிரதமர் மோடி என்று ஒட்டுமொத்த பாஜக அமைச்சர்கள் திமுகவை எதிர்த்து தான் அதிகம் பேசி உள்ளனர். இதை விட என்ன சான்றிதழ் வேண்டும்.

பாஜகவுக்கு அதிக பெரும்பான்மை இருந்தேபோதே தங்களின் வாதங்களால் நாடாளுமன்றத்தை திரும்பி பார்க்க வைத்தவர்கள் நமது எம்பிக்கள். இப்போது மைனாரிட்டி பாஜக இருக்கும்போது அவர்கள் அடங்கி போவார்களா? மக்களுக்கான குரல் இன்னும் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க போகிறது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+