பார் நாகராஜுக்கு நெஞ்சு வலியாம்.. இதை போலீஸ் நம்பணுமாம்.. டாக்டர்கள் வைத்த குட்டு.. மீண்டும் சிறை!
கைதான பார் நாகராஜ் தனக்கு நெஞ்சு வலி என்று பொய் சொல்லியுள்ளார்
Recommended Video
கோவை: "என்னது.. பார் நாகராஜுக்கு நெஞ்சு வலியா... அடப்பாவமே.." என்று கூட சொல்ல தோன்றவில்லை. எல்லாமே பித்தலாட்டம்தான்!
நூற்றுக்கணக்கான பெண்களை கெடுத்து, நாசம் செய்த பொள்ளாச்சி கும்பலில் சம்பந்தப்பட்டவராக கருதப்படுபவர் பார் நாகராஜ்.
அதிமுகவுக்கு நெருங்கிய புள்ளியாக பார்க்கப்படுபவர். இது சம்பந்தமாக நாகராஜே பகிரங்கமாக கூறியுள்ளார். மேலும் புள்ளிகளுடன் எடுத்து கொண்ட போட்டோக்களும் வைரலாகின.

திடீர் கைது
ஆனால் இந்த சமாச்சாரம் எல்லாம் வெளியே வருவதற்கு முன்னமேயே நாகராஜை கட்சியில் இருந்து தூக்கி அடித்தது அதிமுக! இதற்கு நடுவில் என்ன ஆச்சோ தெரியவில்லை.. போன 7ம் தேதி பார் நாகராஜ் திடீரென்று கைதானார்.

நாய் பிரச்சனை
எதற்காக இந்த கைது நடவடிக்கை தெரியுமா? யாரோ ஒரு இளைஞன் நாய் ஒன்று வளர்த்து வந்திருக்கிறான். அதனை 25 ஆயிரம் ரூபாய்க்கு சபரீசன் விலைக்கு வாங்கி உள்ளார். இந்த நாய் வாங்குவதில், வேண்டுமென்றே ஒரு சண்டையை உருவாக்கி... அந்த நாய் வைத்திருந்த இளைஞனை சரமாரியாக வெளுத்து விட்டனர் பார் நாகராஜின் ஆட்கள்.

14 பேர் கைது
இது சம்பந்தமாக உடனடியாக போலீஸ் இறங்கி, ரெண்டு தரப்பிலும் 14 பேர் மீது கேஸ் போட்டு கோவை ஜெயிலில் கம்பி எண்ண வைத்துவிட்டனர். இப்படித்தான் கைதானார் நாகராஜ்!

நாய் மேட்டர்
திருநாவுக்கரசு & கோ கைதாகி ரொம்ப நாள் ஆகியும் பார் நாகராஜ் கைது செய்யப்படவில்லை.. டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியதாக உட்பட எத்தனையோ புகார்கள் வந்தும் நாகராஜ் கைது செய்யப்படவில்லை. மாறாக "சொந்த கிராமத்தில் பாதுகாப்பாக இருக்கும்படி என்னை போலீசாரே சொன்னார்கள்" என்று சொல்லி வந்த நாகராஜைதான் இந்த நாய் வாங்கிற விஷயத்தில் அதே போலீஸ் கைது செய்துள்ளது.

திடீர் நெஞ்சுவலி
சரி, கைதாகி நாகராஜ் ஜெயிலில் இருந்தாரா... அதுவும் இல்லை.. வந்துவிட்டது திடீர் நெஞ்சுவலி. அதனால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார். ஆனால் டாக்டர்களோ செக் செய்து பார்த்துவிட்டு, "யு ஆர் பெர்பெக்ட்லி ஆல் ரைட்" என்று சொல்லி திரும்பவும் ஜெயிலுக்கே அனுப்பிட்டாங்களாம்!

மாஸ்டர் பிளான்
இது எல்லாத்துக்கும் காரணம் என்ன தெரியுமா? சிபிஐ பொள்ளாச்சி விஷயத்தை நோண்டி நுங்கெடுத்து வருகிறது. இதில் மட்டும் நாகராஜ் சிக்கி கொண்டால் அவ்வளவுதான்.. அதனால் அடிதடி கேஸில் உள்ளே தள்ளிவிட்டால், சிபிஐ விசாரணையை ஜவ்வு மாதிரி இழுக்கலாம் என்பதுதான் மாஸ்டர் பிளான்! நாகராஜுக்கு ஆதரவாக ஒருசில போலீசார் இப்படி ஒரு ஐடியாவை தந்ததால்.. ஜெயிலில் சேஃப்டியாக இருக்கிறாராம் நாகராஜ்!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications