ரேஷன் கடைக்கு வர முடியாதவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது? கோவை கலெக்டர் தகவல்
கோவை: கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 12 ஆயிரத்து 635 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடைக்கு வர முடியாதவர்களுக்கு 13-ந் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று கோவை கலெக்டர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 2.21 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. கிலோ பச்சரிசிக்கு 35.20 ரூபாய், சர்க்கரைக்கு 42.84 ரூபாய், கரும்புக்கு 35 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு, மொத்தம் 249.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மட்டும் 11 லட்சத்து 12 ஆயிரத்து 635 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுக்கரும்பு ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 11 ஆயிரத்து 543 அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 1,092 நபர்களுக்கும் என மொத்தம் 11 லட்சத்து 12 ஆயிரத்து 635 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தேவையான பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு முழுமையாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோவை மாவட்டத்துக்கு 9 லட்சத்து 21 ஆயிரத்து 188 சேலைகள், 9 லட்சத்து 20 ஆயிரத்து 73 வேட்டிகள் என மொத்தம் 18 லட்சத்து 41 ஆயிரத்து 261 வேட்டி-சேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
எனவே ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று செல்ல வேண்டும். டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வாங்க முடியாதவர்கள் வருகிற 13-ந் தேதி பெற்று கொள்ளலாம்" இவ்வாறு கோவை கலெக்டர் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications