இப்போதும் கூட வாடகை வீடுதான்.. எளிமையின் உருவம்.. புதிய கோவை மேயர் "நாயகி".. செந்தில் பாலாஜி சாய்ஸ்?
கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரை அமைச்சர் கே. என்நேரு அண்ட் டீம் தேர்வு செய்து இருந்தாலும் கூட.. இவரும் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி சாய்ஸ் என்றே கூறப்படுகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலே செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்து வருவதாக அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், வங்கி ஆவணங்களை கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு வருடமாக அவர் சிறையில் உள்ள நிலையில்.. இந்த வழக்கு அடுத்த 3 மாதங்களில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில்.. திமுக உள்ளே நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மேயர் மாற்றம்: அதன்படி கோவை மேயராக இருந்த கல்பனா சமீபத்தில் ராஜினாமா செய்தார். இவர் செந்தில் பாலாஜியின் சாய்ஸ். நெல்லை மேயர் ராஜினாமாவை தொடர்ந்து கோவை மேயர் ராஜினாமா செய்தார். கோவையில் உள்கட்சி பூசல் நெல்லை மேயர் விவகாரம் போல பட்டவர்த்தனமாக வெளியில் வரவில்லை. வேலை வாய்ப்பு மோசடி வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தேர்வாக கோவை மேயர் கல்பனா இருந்தார்.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயரான கல்பனாவுக்கு, சொந்த கட்சி சகாக்கள் மற்றும் கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேயரும், அவரது கணவர் ஆனந்தகுமாரும் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டினர்.
2023 அக்டோபரில் சின்னவேடம்பட்டியில் சாலைத் திட்டத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தை ஏற்க அவர் ஒப்புதல் வழங்கவில்லை என்று பல கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் கோரிக்கைகளை அவர் மறுத்தாலும், சர்ச்சைகள் ஓயவில்லை. உண்மையில், கல்பனா தனது மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உயர் அதிகாரிகளை சந்தித்து தெளிவுபடுத்த சென்னையில் முகாமிட்டனர்.
ராஜினாமா: கல்பனா உடல்நிலை மற்றும் பிற தனிப்பட்ட காரணங்களால் விலகினார் என்று கூறப்படுகிறது. இரு மாநகராட்சி கவுன்சிலர்கள் மட்டுமின்றி, எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பகுதியில் உள்ள அதிகாரவர்க்கம் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களால் கலக்கமடைந்துள்ளனர்.
கட்சித் தலைமையின் கடுமையான அறிவுறுத்தலின் பேரில் கல்பனா மேயர் பதவியை ராஜினாமா செய்ததாகவும். லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ள மாவட்டங்களில், தி.மு.க., அந்த போக்கை சரி செய்யும் நிலையில் இருப்பதாக தெரிகிறது.
மேயர் தேர்வு: இந்த நிலையில் தற்போது கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரை அமைச்சர் கே. என்நேரு அண்ட் டீம் தேர்வு செய்து இருந்தாலும் கூட.. இவரும் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி சாய்ஸ் என்றே கூறப்படுகிறது. கோவையின் புதிய மேயராக தேர்வாக உள்ள 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, முதல் முறை கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது தேர்தலில் நிற்கவே செந்தில் பாலாஜி மூலம் நேரடியாக தேர்வாகி தேர்தலில் நின்றார். எளிய பொருளாதார பின்புலத்தைக் கொண்ட இவர் தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார். திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் மேயர் பதவியை எதிர்பார்த்த நிலையில், ரங்கநாயகிக்கு கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications