காதலியை கழட்டிவிட்ட நபர்.. 9 மாதம் ஜாலியா இருந்துட்டு.. நம்ம ஊர்ல நடுரோட்டில் நடந்த கும்மாங்குத்து
கோவை: கோவையில் திருமணம் செய்து கொள்ளாமலேயே 9 மாதங்கள் இளம்பெண்ணுடன் குடித்தனம் நடத்தியிருக்கிறார் இளைஞர்.. விரைவில் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி சொல்லியே 9 மாதங்கள் ஏமாற்றியும் வந்துள்ளார். இதனால் ஆத்திரமும் ஆவேசமுமடைந்த பெண், அந்த காதலனை நடுரோட்டிலேயே தூக்கி போட்டு மிதித்து தாக்கியிருக்கிறார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பரபரப்பும், மக்கள் நடமாட்டமும் மிகுந்த கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சாலையில், நேற்றுமுன்தினம் மாலை, ஒரு இளம் காதல் ஜோடி நின்று பேசிக்கொண்டு இருந்தனர்... சிறிது நேரத்தில் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் அந்த வாக்குவாதம் முற்றிவிடவும், இளம்பெண்ணின் முகம் ஆவேசமானது.. பிறகு திடீரென அந்த காதலன் சாலையில் ஓட ஆரம்பித்தார்.. உடனே காதலியும், காதலன் பின்னாலேயே துரத்திக் கொண்டு ஓடினார்.. இந்த காதலியை துரத்திக் கொண்டு மற்றொரு இளைஞர் ஓடிவந்தார்..
அதிர்ச்சியில் மக்கள்
இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அங்கே டியூட்டியில் இருந்த போலீசாரிடம் சொல்லி உள்ளனர்.. அத்துடன், தங்களது செல்போனிலும் இந்த சம்பவத்தை விடியோ எடுத்தனர்..
பிறகு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காதல் ஜோடியை தடுத்து நிறுத்தி, விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், அந்த பெண் கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்றும், காதலன் திருப்பூர் அவிநாசிபாளையத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது... பெண்ணின் பின்னாலேயே ஓடிவந்த இளைஞர், காதலனின் நண்பராம்..
லிவிங் டூ கெதர்
அதாவது இந்த ஜோடி காதலித்து வந்த நிலையில், கல்யாணமும் செய்து கொள்வதென முடிவு செய்தார்கள்.. எனினும், கடந்த 9 மாதமாக கோவையிலேயே வீட்டை வாடகைக்கு லிவிங் டூ கெதரில் தங்கி வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் தகராறு வெடித்து வந்துள்ளது.. ஒருகட்டத்தில் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று காதலன் சொல்லிவிட்டாராம்.. அதனால்தான் காதலனை துரத்திக் கொண்டு ஓடுவதாக போலீசாரிடம் காதலி கூறினார்.
உடனே அந்த காதலன், திருமணம் செய்ய வேண்டுமானால், தன்னுடைய பெற்றோரிடம் பேசிவிட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும் என்றாராம். இதைக்கேட்டதும் ஆத்திரமடைந்த அந்தபெண், 9 மாதங்களாக கல்யாணம் செய்யாமல் குடும்பம் நடத்தியபோது மட்டும் இனித்ததா? என்று கேட்டு, காதலனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டார்...
முகத்தில் ஒரே குத்து
காதலி தன்னை தாக்குவார் என்று காதலன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.. பொதுவெளியிலேயே தாக்கிவிட்டதால், என்ன செய்வது என தெரியாமல் விழித்தார். முகத்தில் குத்து விட்ட பெண், ஆத்திரம் தீராமல் மீண்டும் காதலனை தாக்க பாய்ந்தார்.. ஆனால், காதலன் அவரை தடுத்துக்கொண்டேயிருந்தார்..
பிறகு 2 பேரையும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்ற போலீசார், 2 பேரின் குடும்பத்தினருக்கும் தகவல் தந்தனர்.. பிறகு ஸ்டேஷனுக்கு பதறிக்கொண்டு வந்த பெற்றோரிடம் , 2 பேரையுமே ஒப்படைத்தனர். ஆனால், இரு தரப்பிலுமே புகார் மனு எதுவும் தரவில்லையாம்.. எனவே வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்கிறார்கள் போலீஸ் தரப்பில்..
ஏர்போர்ட் சம்பவம்
கடந்த 2 மாங்களுக்கு முன்பு கோவை ஏர்போர்ட்டிலும் இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது.. காதலியை ஏமாற்றிவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, இளம் மனைவியை ஹனிமூனுக்கு அழைத்து சென்றிருந்தார் அந்த காதலன்.. ஹனிமூன் முடிந்த ஏர்போர்ட் திரும்பியதுமே, ஏர்போர்ட் வாசலிலேயே ஏமாந்த பெண், தகராறு செய்திருந்தார்.. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியிருந்த நிலையில், இந்த கலெக்டர் அலுவலம் சாலை வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications