கோயம்புத்தூர் பாலம்.. முதல் நாள் சாதி பெயரை தூக்கி அரசாணை.. மறுநாளே ஜிடி நாயுடு பெயர்
கோவை: கோவை அவினாசி சாலையில் இன்று திறக்கப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜிடி நாயுடுவின் பெயரை சூட்டியதற்காக எதிர்க்கவில்லை.. ஜிடி நாயுடுவை அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை.. அதற்கு காரணம் அதற்கு முதல் நாள் சாதி பெயரை தூக்கிவிட வேண்டும் என்று அரசு போட்ட அரசாணை தான் காரணம் ஆகும்.. இதனால் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்த கதையாக இது ஆளும் கட்சிக்கு மாறி உள்ளது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மேம்பாலம் கோவையில் திறக்கப்பட்டுள்ளது. மதுரை நத்தம் சாலை மேம்பாலத்தை விட இது 3 கிலோ மீட்டர் பெரியது. 10 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலம் கோவை மாநகரின் மையப்பகுதியியான அவினாசி சாலையில் அமைந்துள்ளது. கோவையை விட பல மடங்கு நெரிசல் உள்ள சாலையான, சென்னையின் ஜிஎஸ்டி சாலையில் கூட இப்படியான மேம்பாலம் இன்று வரை இல்லை.

அவினாசி மேம்பாலம்
அந்த அளவிற்கு தொலைக்நோக்கோடு அதிமுக, திமுக இரண்டு அரசுகளுமே கோவையில் மேம்பாலத்தை உருவாக்கி உள்ளன. இந்த மேம்பாலம் காரணமாக கோவையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் நகரை விட்டு வெளியே போய்விட முடியும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், கோவை என்றால் இந்த மேம்பாலம் தான் இனி அடையாளம் என்கிற அளவிற்கு உள்ளது. அப்படிப்பட்ட மேம்பாலத்திற்கு கோவை மாநகரில் பிறந்த விஞ்ஞானியான ஜிடி நாயுடுவின் பெயரை முதல்வர் ஸ்டாலின் சூட்டியுள்ளார்.
இந்தியாவின் எடிசன் ஜிடி நாயுடு
ஜிடி நாயுடுவின் பெயரை சூட்ட காரணம் இல்லாமல் இல்லை.. இந்தியாவின் எடிசன் என அழைக்கப்பட்ட ஜி.டி.நாயுடு கோவையை அடுத்த சூலூர் கலங்கல் கிராமத்தில் பிறந்தவர் ஆவார். யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தினார். அவருடைய கண்டுபிடிப்புகள் ஏராளம். தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை தன் பெயரில் பதிவு செய்து கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும், இந்தியர்கள் யாராகயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என அறிக்கை வெளியிட்டவர் ஆவார்.
ஜிடி நாயுடுவின் சாதனை
1938-ம் ஆண்டு தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்களை கோவை வட்டார கழகத்திடம் இலவசமாக ஒப்படைத்தார். எதிர்கால தலைமுறையினர் தொழிற்கல்வி பயின்று சமுதாயத்தை தொழில்துறையில் மேம்படுத்திட பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை தொடங்கினார். இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே தொடங்கியவர். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் கோவைக்கு பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன் என்று போற்றப்படும் ஜிடி நாயுடுவின் பெயரை சூட்டியதை பலரும் வரவேற்கிறார்கள்..
அரசாணை என்ன
அதேநேரம் அரசியல் கட்சிகள் இதனை எதிர்க்க காரணம்.. சமீபத்தில் அரசு வெளியிட்ட சாதி பெயர்கள் இல்லாத சாலை , தெருக்கள் என்ற அரசாணை தான். அந்த அரசாணையில் , " உள்ளாட்சி அமைப்புகளின் குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பஸ் நிலையங்கள், சந்தைகள் போன்ற சொத்துகள் மற்றும் நீர்நிலைகள் போன்ற பொது உட்கட்டமைப்புகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவைச் சார்ந்த மக்களையும், அவர்களது உணர்வுகளையும் இழிவுபடுத்துவதாக அல்லது பாகுபாடு காட்டும் வகையில் அமைந்துள்ளதா? என்பதையும் குறித்து மதிப்பிடும் வகையில் பெயர்கள் தொடர்பாக விரிவான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கவனமாக கையாள வேண்டும்
சில பெயர்கள் - பிரிவுகள் அவசியம் மாற்றப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம், பறையர் தெரு, சக்கிலியர் சாலை போன்றவை தவிர்க்கப்பட வேண்டிய பெயர்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பொது-சாதிச்சார்பற்ற தன்மை கொண்ட புதிய பெயருடன் பெயரை மாற்றலாம். பொதுமக்கள் ஏற்கனவே உள்ள பெயர்களை மாற்ற விரும்பவில்லை என்றால் அந்த பெயர்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இது மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டும்" என்று அரசாணை வெளியிட்டது.
அரசு பரிந்துரைத்த பெயர்கள்
அத்துடன் தமிழக அரசு நீக்கப்படும் பெயர்களுக்கு பதிலாக வைக்க வேண்டிய புதிய பெயர்களை எடுத்துகாட்டாக அறிவித்துள்ளது. அதன்படி குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு ரோஜா, மல்லி, செம்பருத்தி, சூரியகாந்தி, சாமந்தி, தாழம்பூ, காந்தள், கனகாம்பரம், கொன்றை, மகிழம்பூ, முல்லை, செண்பகம், குவளை, குறிஞ்சி, செவ்வந்தி ஆகிய பெயர்கள் வைக்கலாம். அதேபோல் தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளுவர், அவ்வையார், கபிலர், சீத்தலைச் சாத்தனார், நக்கீரர், பிசிராந்தையார், கம்பர், அகத்தியர், வீரமாமுனிவர், பாரதியார், பாரதிதாசன், மகாத்மா காந்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகிய பெயர்களை வைக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
அரசாணையால் சிக்கல்
இதில் பல்வேறு தலைவர்களின் பெயர்கள் இல்லை.. இது அரசியல் கட்சிகள் கோபத்திற்கு காரணமாக அமைந்தது. அதேபோல் அரசு, சாதி பெயர்களை நீக்க அரசாணை வெளியிட்ட அதே நாளில், ஜிடி நாயுடு பெயரை கோவை மேம்பாலத்திற்கு சூட்டுவதாக அறிவித்தது தான் எதிர்ப்புக்கு காரணம்.. மற்ற தேசிய தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதி அடையாளங்களை நீக்கி பெயரை அரசு மாற்றியது.அதன்படியே பெயர்களும் அரசில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஜிடி நாயுடுவின் பெயரை அப்படி பயன்படுத்த முடியாது.. ஏனெனில் ஜிடி நாயுடு என்பது தான் அடையாளம்.. அடையாள பெயர்களை எப்படி மாற்றுவது என்பது தான்சிக்கலே.. எனவே அரசியல் கட்சிகள் இதில் அரசின் நிலைப்பாடு என்ன என்று கேட்பதுடன், ஜிடி நாயுடு என்ற பெயரை மட்டும் வைப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றன.
கொள்ளிக்கட்டை
அரசு சாதி பெயர்களை நீக்க முயற்சிப்பது என்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறிவதைவிடவும் ஆபத்தானது. ஏனெனில் சிறு சிக்கல் வந்தாலும், அது சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியான அரசாணை வெளியிட்ட மறுநாளே கோவையில் மேம்பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயரை (சாதிப்பெயர் உள்ளதால்) வைத்தது தான் எதிர்ப்பு காரணமாக பார்க்கப்படுகிறது.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications