டெயிலர் "மகாலட்சுமி".. தள்ளாடிய கொண்டே வந்த வினோத்.. விடிய விடிய நடந்த அக்கிரமம்.. பொள்ளாச்சி பகீர்
கணவனை கத்தரிக்கோலால் குத்தி கொன்ற மனைவி கைதானார்
கோவை: டைலரிங் மிஷினில் உட்கார்ந்து மகாலட்சுமி துணி தைத்து கொண்டிருந்தபோதுதான், தள்ளாடி கொண்டே என்ட்ரி தந்துள்ளார் கணவர்.. அதற்கு பிறகுதான் அந்த பயங்கரம் நடந்துள்ளது..!
பொள்ளாச்சி வடக்கிபாளையம் வாட்டர் டேங்க் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார்... 36 வயதாகிறது.. பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்தார். மனைவி பெயர் மகாலட்சுமி.. 32 வயதாகிறது..
திருமணமாகி 10 வருடமாகிறது.. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வினோத்குமாரை திடீரென பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதித்தார் மகாலாட்சுமி.. வினோத்குமார் உடம்பெல்லாம் ரத்தம் வழிந்தது..

கத்திக்குத்து
அவரது மார்பு, வயிறு பகுதிகளில் கத்தி குத்தப்பட்டு, காயங்கள் ஆழமாக கிடந்தன.. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கணவனை அழைத்து வந்தார் மகாலட்சுமி.. வினோத்குமாரின் நிலைமையை பார்த்ததும் டாக்டர்கள் பதறிப்போய்விட்டனர்.. தீவிர சிகிச்சையும் அளித்தனர். ஆனால் எவ்வளவோ முயற்சி செய்தும், வினோத்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மகாலட்சுமி
இது குறித்து வடக்கிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்தனர்.. முதல் விசாரணையே மகாலட்சுமிதான்.. வீட்டில் தகராறு வந்ததால், கத்திரிக்கோலை எடுத்து, தன்னை தானே கணவன் குத்திக் கொண்டதாக மகாலட்சுமி கூறினார்.. ஆனால், வினோத்குமாரின் வயிறு, மார்பு பகுதிகளில் காயங்கள் ஆழமாக கிடந்ததை பார்த்ததும், போலீசாருக்கு சந்தேகம் வந்தது..

வினோத்குமார்
தற்கொலை செய்வதற்காக இவ்வளவு ஆழமாக ஒருவர் தன்னை தானே குத்திக்கொண்டிருக்க முடியாது என்றும் தோன்றியது.. அதனால், மகாலட்சுமியிடம் தங்கள் பாணியில் விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், கணவர் வினோத்குமாரை கத்தரிக்கோலால் குத்தி கொன்றது தான்தான் என்று மகாலட்சுமி ஒப்புக் கொண்டார்.. வினோத்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதாம்.. மனைவி மீது சந்தேகமும் உள்ளதாம்..

சண்டை
இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் சண்டையும் வந்துபோவது இயல்பாக இருந்திருக்கிறது.. சம்பவத்தன்றும் அப்படி ஒரு சந்தேக சண்டை வந்துள்ளது.. நைட் ஆரம்பித்த சண்டை, விடிய விடிய நீடித்துள்ளது. இதில், மனைவியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார் போதையில் இருந்த வினோத்குமார்..

குடிப்பழக்கம்
இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மகாலட்சுமி வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து வினோத்குமாரை சரமாரியாக குத்தி கொன்றுள்ளார் என்பது தெரியவந்தது.. இப்போது மகாலட்சுமியை போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது... "குடி குடியை கெடுக்கும்" என்ற பசப்பு வசனம் ஒருபக்கம் இருந்தாலும், இன்னும் எத்தனை குடும்பங்கள் இந்த குடியால் நாசமாக போகிறதோ?!












Click it and Unblock the Notifications