டெல்லி தந்த கிரீன் சிக்னல்! 14 மணி நேரம்.. வேலுமணி நண்பர் வீட்டை சல்லடை போட்ட ஐடி.. நடந்தது என்ன?
கோயம்புத்தூர்: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர் மற்றும் நண்பர் சந்திரசேகர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை செய்து வருகிறார்கள். நேற்று சோதனை நடந்த நிலையில் இன்றும் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. சந்திரசேகர் வீட்டில் 14 மணி நேரம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் என்னென்னெ ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன?
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடத்தப்பட்டது. 60 இடங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

ஏன் ரெய்டு
சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட டெண்டர்களில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்தது . கான்டிராக்டர் திருவேங்கடம் கொடுத்த புகார், திமுக ஆர்.எஸ் பாரதி வழக்கு மற்றும் அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்குகளின் விளைவாக இந்த முதல் ரெய்டு நடந்தது. எஸ்.பி வேலுமணி அவருக்கு நெருக்கமான அன்பரசன், கே. சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர், ஆர் முருகேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இரண்டாவது ரெய்டு
ஆனால் அந்த ரெய்டு குறித்த தகவல் முன்பே எஸ்பி வேலுமணிக்கு தெரிந்துவிட்டது என்று கூறப்பட்டது. இதனால் பெரிய அளவில் ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் ரெய்டு நடைபெற்றது. இதுவும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு. சென்னையில் மட்டும் மொத்தம் 8 இடங்களில் ரெய்டு நடந்தது. கோவையில் 41 இடங்களில் ரெய்டு நடந்தது.

யார்
இந்த இரண்டு ரெய்டிலும் சந்திரசேகர் குறி வைக்கப்பட்டார். எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர் மற்றும் நண்பர்தான் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக இருக்கிறார். நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளராக இவர் உள்ளார். இவரின் மனைவி ஷர்மிளா கோவையில் கவுன்சிலராக இருக்கிறார். இவர்களின் வீடு வடவள்ளியில் இருக்கிறது. இவருக்கு சொந்தமாக பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் உள்ளன.

கட்டுமான நிறுவனங்கள்
நேற்று சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகங்களை 6 குழுக்களாக பிரிந்து வருமானவரித்துறை சோதனை செய்தது. சந்திரசேகர் வீட்டில் மட்டும் 5 அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவரின் சகோதரர் வீடு,அப்பா வீடு, மாமனார் வீடு என்று பல இடங்களில் 14 மணி நேரம் சோதனை செய்தனர். சந்திரசேகர் வீட்டை சல்லடை போட்டு துளைத்து எடுத்தனர். நேற்று ரெய்டு முடியும் போது ஆவணங்களை ஒரு அறையில் வைத்து அதற்கு மட்டும் சீல் வைத்தனர்.

மீண்டும்
பல முக்கியமான ஆவணங்கள் இந்த ரெய்டில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதை அடிப்படையாக வைத்தே இன்று இரண்டாவது நாளாக ரெய்டு நடக்கிறது. இன்றும் 6 இடங்களில் ரெய்டு நடக்கிறது. இதுவரை தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறைதான் ரெய்டு நடத்தியது. இந்த முறை மத்திய அரசின் வருமான வரித்துறை வேலுமணி நண்பரை குறி வைத்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

டெல்லி
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தில் உள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு டெல்லியின் உதவியை நாடியதாக கூறப்பட்டது. சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் டெல்லிக்கு கூட பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில்தான் வேலுமணியின் நண்பர் வருமானவரித்துறை மூலம் குறி வைக்கப்பட்டு இருக்கிறார். எடப்பாடிக்கு எல்லாமுமாக இருப்பவர் வேலுமணி. அப்படி இருக்கும் போது வருமானவரித்துறை வேலுமணி நண்பரை குறி வைத்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
-
தேன்கூட்டில் கல்லெறிந்ததா தவெக? வேலுமணி கிட்ட சிவி சண்முகம் கேட்ட அந்த கேள்வி? அப்ப எடப்பாடி முடிவு? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
எஸ்.பி.வேலுமணியிடம் சீறிப்பாய்ந்த சி.வி.சண்முகம்.. எல்லா பிரச்சனைக்கும் நீங்க தான் காரணம்! -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications