மொழிபெயர்ப்பில் சிரமம்.. சிரித்தபடி ராகுல் கூறிய வார்த்தை.. மைக்கோடு அருகே சென்ற திருச்சி சிவா
கோவை: கோவையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் திமுவின் திருச்சி சிவா எம்பி, ராகுல் காந்தியின் ஆங்கில பேச்சை தமிழில் மொழிப்பெயர்ப்பதில் சிரமப்பட்டார். அப்போது சிரித்தபடி ராகுல் கூறிய வார்த்தையும், அதை கேட்டதும் திருச்சி சிவா மைக் தூக்கி கொண்டு அவர் அருகே போனது தொண்டர்களை கலகலப்பாக்கியது.
கோவை செட்டிப்பாளையத்தில் நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியும், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்றனர்.

கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வர மூர்த்தி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி ஆகிய 3 பேருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவரது உரையை தமிழில் திமுக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான திருச்சி சிவா தமிழில் மொழிப்பெயர்த்தார். அப்போது ராகுல் காந்தி தனது தொடக்க உரையில் ஆங்கிலத்தில் ‛‛எனக்கு எப்போதும் தமிழகம் வருவதும், உங்களிடம் பேசுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.
‛‛ராகுலே வருக’’.. அடுத்த வார்த்தை தான் முக்கியம்.. பிரதமர் வேட்பாளரை சூசகமாக அறிவித்தாரா ஸ்டாலின்?
ஆனால் அதனை திருச்சி சிவா சரியாக புரிந்து கொள்ளவில்லை. இதனால், ‛‛உங்களுக்கு முன்னால் முக்கியமானவற்றை சொல்ல இருக்கிறேன்’’ என திருச்சி சிவா மொழிப்பெயர்த்தார். அதன்பிறகு ராகுல் காந்தி ஆங்கிலத்தில், ‛‛இன்று இந்தியாவில் சித்தாந்த ரீதியிலான போர் நடந்து வருகிறது’’ எனக்கூறினார். ஆனால் திருச்சி சிவா அதனை மொழிப்பெயர்க்காமல் அப்படியே நின்றார்.
ஸ்டாலினுக்காக சுவர் ஏறி குதித்து ‛கிப்ட்’ வாங்கிய ராகுல்.. வெளியான வீடியோ.. கோவையில் சுவாரசியம்!
சில வினாடிகள் காத்திருந்த ராகுல், திருச்சி சிவாவை பார்த்தார். உடனடியாக திருச்சி சிவா, ‛‛இன்று இந்தியாவில் தத்துவ ரீதியிலான போராட்டம் நடந்து வருகிறது’’ என்றார். இதையடுத்து சிரித்த ராகுல் ‛‛நீங்கள் ஏன் இங்கு வரக்கூடாது’’ என திருச்சி சிவாவிடம் கேட்டார். இதையடுத்து திருச்சி சிவா உடனடியாக தனது மைக்கை கையில் தூக்கிக்கொண்டு ராகுல் காந்தி அருகே வைத்தார்.
இந்த வேளையில் சிரித்தபடி ராகுல் காந்தி, ‛‛இங்கு காற்று அடிக்கிறது. இதற்கு மத்தியில் மொழிமாற்றம் என்பது கடினமானதாக உள்ளது’’ எனக்கூறினார். இதை கேட்டு திருச்சி சிவா உள்பட அனைவரும் சிரித்தனர். இந்த சம்பவம் பிரசார இடத்தை கலகலப்பாக்கியது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications