ஸ்டாலினுக்காக சுவர் ஏறி குதித்து ‛கிப்ட்’ வாங்கிய ராகுல்.. வெளியான வீடியோ.. கோவையில் சுவாரசியம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரை ஏறிக்குதித்து ‛கிப்ட்’ வாங்கிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. இதையடுத்து ராகுல் காந்தி முதல் முறையாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இன்று தமிழகம் வந்தார்.

Rahul who jumped over the center Median and bought gift for CM Stalin in Coimbatore

முதலில் நெல்லையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

‛‛செந்தில் பாலாஜியை மறக்காத ஸ்டாலின்’’.. கோவை மேடையில் திடீர் பாராட்டு.. என்ன சொன்னார் தெரியுமா?


அதன்பிறகு ராகுல் காந்தி கோவை செட்டிப்பாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினும் சென்னையில் இருந்து கோவை வந்திறங்கினார். கோவை பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியும், முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்றனர். இருவரும் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வர மூர்த்தி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி ஆகிய 3 பேருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

மேலும் மத்திய பாஜக அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்ததோடு, ‛இந்தியா’ கூட்டணிக்கு ஏன் ஆதரவு தர வேண்டும் என்றும், மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும் என்றும் பேசினர். அதோடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு இருவரும் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தனர்.

‛‛ராகுலே வருக’’.. அடுத்த வார்த்தை தான் முக்கியம்.. பிரதமர் வேட்பாளரை சூசகமாக அறிவித்தாரா ஸ்டாலின்?


இந்நிலையில் தான் கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு ‛கிப்ட்’ கொடுப்பதற்காக ராகுல் காந்தி இரவில் சாலை மத்தியில் உள்ள தடுப்பு சுவரை தாண்டி குதித்த சம்பவம் நடந்துள்ளது. அதாவத ஸ்டாலினை சந்திக்கும்போது அவருக்கு ‛கிப்ட்’ வழங்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். இதையடுத்து ராகுல் காந்தி காரில் இருந்து இறங்கி சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரை தாண்டி குதித்து மறுபுறம் உள்ள ஸ்வீட் கடைக்கு சென்றார்.

Rahul who jumped over the center Median and bought gift for CM Stalin in Coimbatore

அங்கு அவர் ‛மைசூர் பாகு’ பார்சலை வாங்கினார். இந்த வேளையில் ஒருவர் ‛யாருக்கு வாங்குகிறீர்கள்’ என ராகுல் காந்தியிடம் கேட்க அவர், ‛‛என் சகோதரர் ஸ்டாலினுக்கு.. ’’ என தெரிவித்தார். அதன்பிறகு அந்த கடையில் வேலை செய்வோர் ராகுல் காந்தியுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டனர். அதன்பிறகு ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டார். மேலும் மைசூர் பாகு பார்சலை வாங்கி கொண்டு ராகுல், ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். அதனை ஸ்டாலினும் முகமலர்ச்சியோடு பெற்று கொண்டார்.

இதற்கிடையே ராகுல் காந்தி இரவில் சாலை தடுப்பு சுவர் ஏறி ராகுல் காந்திக்காக ‛மைசூர் பாகு’ வாங்கி பணியாளர்களுடன் போட்டோ எடுத்து கொண்ட வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+