திடீரென நிறம் மாறிய சபரிமலை ஐயப்பன் கோவில் மேற்கூரை! தங்கத்தை பிரித்து எடுக்க திராவகம் வீச்சு?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பான் கோவிலில் தங்கம் திருட்டு தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்க மேற்கூரை நிறம் மாறியது. இதனால் தங்கத்தை பிரித்து எடுக்க யாராவது திராவகத்தை வீசினார்களா? என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளா மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கருவறை கதவுகள் மற்றும் துவார பாலகர் சிலை மற்றும் மேற்கூரைகள் தங்க கவசங்களால் செய்யப்பட்டு உள்ளது.

controvesy-creates-after-sabarimala-temple-gold-roof-discolouration

இந்நிலையில், தான் கருவறை கதவுகள், துவர பாலர் சிலை தங்க கவசங்களில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கின் சர்ச்சை இன்னும் முடியவில்லை. எஸ்ஐடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் கேரளா உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் எஸ்ஐடி அதிகாரிகள் சபரிமலை கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கிடையே தான் தற்போது இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நாளை வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தற்போது பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இப்படியான சூழலில் தான் தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்க மேற்கூரையின் நிறம் திடீரென்று மாறி உள்ளது. தங்க மேற்கூரையின் ஒரு பகுதி கருப்பு நிறமாக மாறி உள்ளது. தங்கத்தை பிரித்தெடுக்க யாராவது அந்த மேற்கூரை மீது திராவகம் ஏதேனும் வீசினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் பார்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரைண மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், ''தங்க மேற்கூரை நிறம் மாறியதற்கு நெய் காரணமாக இருக்கலாம். மேற்கூரையின் மீது பட்ட நெய்யால் தங்க மேற்கூரையின் நிறம் மாறி இருக்க அதிக வாய்ப்புள்ளது. கோவிலுக்கு வந்த பக்தர்களில் யாராவது ஆர்வக்கோளாறில் மேற்கூரையின் மீது நெய்யை தெளித்து இருக்கலாம் என்று நினைக்கிறோம். இருப்பினும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+