வெற்றிலை என்ற இயற்கை எனர்ஜி பூஸ்டர்! மன அழுத்தம், பதற்றத்தை நொடியில் விரட்டும் ஆர்கானிக் குணங்கள்
சென்னை: பாரம்பரியமிக்க வெற்றிலையின் மருத்துவக் குணங்களை நவீன அறிவியல் உலகம் வியப்புடன் உற்றுநோக்கத் தொடங்கியுள்ளது. இப்பேதைய மருத்துவ ஆராய்ச்சிகள் வெற்றிலையை வெறும் செரிமானப் பொருளாக பார்க்காமல், புற்றுநோய்க்கு எதிரான ஒரு கேடயமாகவும் மன அழுத்தத்தை நீக்கும் இயற்கை மருந்தாகவும் அடையாளம் காண்கின்றன. காலங்காலமாக நம்முடைய பண்பாட்டில் கலந்திருக்கும் வெற்றிலை, இன்றைய நவீன மருத்துவத்தில் எப்படி ஒரு புதிய மைல்கல்லாக மாறுகிறது என்பதை இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!!
வெற்றிலைகள் உடலுக்கு வெப்பம் தரக்கூடியது.. தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்க உதவுகிறது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் போன்ற மனிதனின் முக்கிய உறுப்புகளின் உறுதிக்கும், ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.. நரம்பு மண்டலத்துக்கு பலம் தருவதால், வளரும் குழந்தைகளுக்கு இந்த வெற்றிலை சாறு தருவார்கள், இதனால் அவர்களின் நினைவுத்திறனும் அதிகரிக்குமாம்.

வெற்றிலை பயன்கள்
குறைவான கொழுப்பு, மிதமான புரதம் உள்ளதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு வெற்றிலை கை கொடுக்கிறது.. இளம் கொழுந்து வெற்றிலையுடன் 5 மிளகு சேர்த்து, வாயில் போட்டு மென்று தின்றால் உடல் எடை மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். அதிலும், வெறும் வயிற்றில் 8 வாரங்களுக்கு இப்படி செய்வதால், குடல் வலி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற கோளாறுகளும் நீங்கும்.
குழந்தைகளுக்கு நெஞ்சு சளி, இருமல் தொல்லை இருந்தால், ஒரே ஒரு வெற்றிலையில் 4 துளசி இலைகளை வைத்து கசக்கி பிழிந்து அந்த சாற்றினை மட்டும் தரலாம். அதேபோல உடலில் வெட்டுக்கள், சிராய்ப்புகள், தடிப்புகள், காயங்களுக்கு மருந்தாகக்கூடியவை.. மலச்சிக்கல் இருந்தால் தாம்பூலத்துடன், கொஞ்சம் பாக்கை அதிகம் சேர்க்க வேண்டும். வாய் நாற்றம் உள்ளவர்கள் கிராம்பு, ஏலக்காய் பயன்படுத்த வேண்டும்.
ஆண்களின் அருமருந்து
வெற்றிலைகளை அளவோடு சாப்பிட்டுவந்தால் ஆண்மை குறைபாடும் நீங்கும் என்கிறார்கள்.. ஆண்களின வீரிய சக்தி அதிகரிக்க இரவில் தாம்பூலத்துடன் சாதிக்காய் சேர்க்க வேண்டும். சுண்ணாம்பு இருப்பதால் எலும்புகள் உறுதியடையும்..
வெற்றிலைச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடும்போது, விறைப்பு பிரச்சனை நீங்குவதாகவும் கூறுகிறார்கள். அதேபோல வெற்றிலையில், துளசி வேர்ப்பொடி சிறிது கலந்து சாப்பிடுவதால் சாப்பிட்டாலும் ஆண்களுக்கு பலன் தரும் என்கிறார்கள்.. எனினும் டாக்டர்களின் ஆலோசனையை பெற்ற பிறகே, இதை மருந்தாக எடுத்து கொள்ள வேண்டும்.
புற்றுநோய் சிகிச்சை
அதேபோல புற்றுநோய் சிகிச்சையில் வெற்றிலை ஒரு புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது. ஏனென்றால் வெற்றிலையில் நிறைந்துள்ள ஹைட்ராக்சிசவிகோல் (Hydroxychavicol) மற்றும் யூஜெனால் (Eugenol) போன்ற சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மனித உடலில் உள்ள வீரியமிக்க புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என்று தற்போதைய மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்து வருகின்றன.
குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் செல்களைக் குறிவைத்து, ஆரோக்கியமான செல்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படுத்தாமல், புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கும் அபோப்டோசிஸ் (Apoptosis - Cell suicide) என்ற சுய அழிவுச் செயல்பாட்டை வெற்றிலை சாறு தூண்டுவதாக ஆய்வகச் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கீமோதெரபி போன்ற கடுமையான சிகிச்சைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் குறைக்கும் ஒரு துணை மருந்தாக வெற்றிலையைப் பயன்படுத்துவது குறித்தும், அதன் மூலக்கூறுகளைக் கொண்டு புற்றுநோய்க்கான புதிய மருந்துகளை வடிவமைப்பது குறித்தும் உலகெங்கிலும் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் இப்போது தீவிரமான மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆர்கானிக் குணங்கள்
உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மனிதனின் மனநலனை மேம்படுத்துவதிலும் வெற்றிலையின் ஆர்கானிக் குணங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இன்றைய இயந்திரத்தனமான வாழ்வில் ஏற்படும் கடுமையான மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கும் ஒரு இயற்கை மூலிகையாக வெற்றிலை செயல்படுகிறது.
இதில் உள்ள நறுமண எண்ணெய்கள் (Essential oils) மற்றும் ஃபீனாலிக் கலவைகள் (Phenolic compounds), மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் 'டோபமைன்' (Dopamine) மற்றும் 'செரட்டோனின்' (Serotonin) போன்ற நியூரோடிரான்ஸ்மிட்டர்களின் சுரப்பைச் சீராக்குகின்றன.
இந்த ஆர்கானிக் வேதிப்பொருட்கள் மத்திய நரம்பு மண்டலத்தை மென்மையாக ஊக்கப்படுத்தி, நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியூட்டுவதுடன், உடலில் சுரக்கும் மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் (Cortisol) அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. இதனால், பதற்றமான சூழ்நிலையிலும் மனம் அமைதியடைந்து, மூளை சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குவதை நவீன நரம்பியல் ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications