கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூமில் என்ன நடந்தது.. "டிக் டிக் டிக்" நாயகனின்15 நிமிட "திக் திக்".. பரபரப்பை கூட்டிய அந்த 2 சுற்று

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் கமல் போட்டியிட்ட, தெற்கு தொகுதியில், கடைசி நேரத்தில் ஓட்டு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது... இதற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது..!
தமிழகத்தின் மொத்த தொகுதிகளையும்விட, இந்த ஒத்த தொகுதிதான் நித்தமும் பெரும் எதிர்பார்ப்பை கூட்டி வந்தது.. இந்த எதிர்பார்ப்பு ரிசல்ட் வரும் வரை நீடித்ததுதான் ஆச்சரியம்.

Recommended Video

    Kamal தோல்விக்கு என்ன காரணம்? கடைசி நேரத்தில் என்ன நடந்தது?

    இதற்கு முன்பு வேறு எந்த தொகுதியும், ஆரம்பம் முதல் கடைசி நாள் வரை எதிர்பார்ப்பை எகிற வைக்கவில்லை.. இந்த தொகுதியில் யார் ஜெயிப்பார்கள் என்பதைகூட எந்த கணிப்புகளாலும் இறுதிவரை சொல்லவே முடியவில்லை.

    நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் குறைந்த வாக்குகள்.. மாற்றங்கள் கடுமையாக இருக்கும்.. கமல் வார்னிங்!நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் குறைந்த வாக்குகள்.. மாற்றங்கள் கடுமையாக இருக்கும்.. கமல் வார்னிங்!

    வாக்கு எண்ணிக்கை

    வாக்கு எண்ணிக்கை

    இதனால், முகவர்கள் என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பவும், சாப்பாட்டு டைம் என்ற சொல்லி இருக்கிறார்கள்.. காலையில் 8 மணிக்கு ஆரம்பித்த தபால் இரவு 8:15 மணி ஆகியும் இன்னும் எண்ணி முடிக்கப்படவில்லையா? என்று கேட்டுள்ளனர்.. ஆனால், தெற்கு தொகுதியில் 2,393 தபால் ஓட்டுகள் பதிவாகவும், அவற்றை அனைத்து வேட்பாளர்களின் முகவர்களிடம் காட்டி விட்டு, அதற்கு பிறகு பெட்டியில் போட வேண்டும்... அதன்பிறகு தனித்தனியாக எண்ண வேண்டும் என்று காரணம் சொல்லப்பட்டுள்ளது.

    கமல்

    கமல்

    ரிசல்ட் அன்று, முதல் சுற்றில் இருந்து 22 சுற்று வரை கமல்தான் லீடிங்கில் இருந்தார்.. 23வது சுற்றில் தான் லேசான மாற்றம் வந்தது.. 890 வாக்குகள் கூடுதலாக பெற்று டக்கென டாப்புக்கு போனார் வானதி.. ஆனால், 15 நிமிஷங்களாக ஸ்ட்ராங் ரூமில் இருந்து ஓட்டு மிஷின்கள் எடுத்துவரப்படவில்லை.. இதனால் ஓட்டு எண்ணுவதும் நிறுத்தி வைக்கப்பட்டது.

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    இதற்கு நடுவில்தான், அந்த 2 மிஷினில் திடீர் தகராறு ஏற்பட்டதாக ஒரு புகார் எழுந்தது.. அந்த மிஷின்களில் தகவல் மாறியிருந்ததாக கூறப்பட்டது.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதற்குரிய ஆவணங்களை வைத்து உடனடியாக சரி பார்த்தனர். அந்த இயந்திரத்தில், யார், யாருக்கு எவ்வளவு ஓட்டுகள் விழுந்திருந்தன என்பது, வேட்பாளர்கள் முன்னிலையிலேயே எண்ணி முடிக்கப்பட்டன.

    டென்ஷன்

    டென்ஷன்

    இப்படி அந்த 2 வாக்கு மிஷின்களில் பிரச்சனை என்றதுமே சோஷியல் மீடியாவில் மய்ய உறுப்பினர்கள் டென்ஷன் ஆகிவிட்டனர்.. ஆனால், அதிகாரிகள் இதை பற்றி சொல்லும்போது, எங்கிருந்தும், யாரிடம் இருந்தும் அழுத்தம் வரவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும்போது, கடைசி இரு சுற்றுக்கு முன், தபால் ஓட்டுகளை எண்ணி முடித்திருக்க வேண்டும் என்பது விதிமுறை...

    இடைவேளை

    இடைவேளை

    ஆனால், அது முடியாமல் போய்விட்டது.. அதனால் சாப்பாட்டு இடைவேளையை அறிவித்தோம்... இவை எல்லாம் வீடியோவிலும் பதிவாகி உள்ளன.. சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் எல்லாருமே எங்களுடன்தான் இருந்தனர்.. இதில் எந்தவித ஒளிவு மறைவு இல்லை" என்றனர். கமல் பெற்ற தோல்வியில் இருந்து மய்யத்தினர் இன்னும் மீண்டு எழவே இல்லை.

    மிஷின்கள்

    மிஷின்கள்

    அதேசமயம் கமல் தோல்வி, ஓட்டு மிஷின்களை காரணம் சொல்லக்கூடாது, அதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன என்று தங்கள் கருத்துக்களை நம்மிடையே சொல்லினர் சில அரசியல் நோக்கர்கள்.. முதலில் கமல் தன்னுடைய கட்சிக்கான அடித்தளத்தை சரியாக கட்டமைக்கவில்லை.. வலுவான கூட்டணி இல்லை.. சரத்குமாருக்கு ஒரு சதவீதத்தைவிட குறைவான வாக்கு வங்கி வந்துள்ளது.. அதேபோல, பாரிவேந்தர் கட்சியும் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வங்கியை பெற்றுள்ளது.. இப்படி ஒரு சதவீதம்கூட இல்லாத கட்சிகளுடன் கமல் எதை நம்பி கூட்டணி வைத்தார்?

    சமக

    சமக

    இவர்களை நம்பியதற்கு கமல் தனியாகவே போட்டியிட்டிருக்கலாமே? அதுமட்டுமல்ல, கமலுக்கு தேமுதிகவை போலவே பரவலான வாக்கு வங்கி, கடந்த எம்பி தேர்தலில் கிடைத்தது.. அப்படி பார்க்கும்போது, முக்கியமான தொகுதிகளிலும் மய்யத்துக்கு ஓட்டு உள்ளது.. இவைகளை கமல், கூட்டணி கட்சிகளுக்கு தந்துவிட்டார்.. இந்த பிரச்சனை, பிரச்சார சமயங்களிலேயே வெடித்தது.

    கமல்

    கமல்

    மய்யம் ஆதரவுள்ள தொகுதிகளை சமகவுக்கு, ஏன் தரப்பட்டது என்றுகூட கேள்வி எழுப்பி உள்ளனர்.. அதனாலேயே பலர் இறங்கி வேலை பார்க்காமலும் இருந்துள்ளனர். மற்றொரு பக்கம், இந்த முறை, வசதி படைத்தவர்களுக்கே கமல் சீட் தந்துள்ளார்.. களப்பணியில் இறங்கி கட்சியை இத்தனை காலம் கட்டமைத்தவர்களுக்கு வாய்ப்பு தராமல், வெறும் வசதியை மட்டுமே நம்பி கமல் சீட் தரலாமா என்ற அதிருப்தியும் எழுந்தது..

    சீட்

    சீட்

    ஆனால், ஏற்கனவே வசதி இல்லாதவர்களுக்கு சீட் தரவும்தான், அவர்களுக்கு கடன் சுமை கூடிவிட்டது.. அதனால்தான், மேலும் சுமை தரக்கூடாது என்று இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டது.. வரும் தேர்தலில் அவர்களை நிச்சயம் மய்யம் கைவிடாது என்று இதற்கு காரணம் சொல்லப்படுகிறது. இப்படி எத்தனையோ உட்கட்சி பிரச்சனைகள் இருக்கும்போது, வாக்கு மையத்தையோ, எதிர்பாராத விதமாக 2 மிஷினில் நடந்த ரிப்பேரை வைத்து தேர்தல் ஆணையத்தையோ சந்தேகப்படக்கூடாது என்றனர்.

    English summary
    Why Kamalhasan missed the chance to win in Kovai South Constitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X