Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛சிவபெருமானை’ வணங்கிய ராமர், ராவணன்.. ஏன் தெரியுமா? ஈஷாவில் கதையாக விளக்கிய ஜனாதிபதி திரெளபதி முர்மு

கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்று சிவபெருமானை ஏன் ராமர், ராவணன் வணங்கினர் என்பது பற்றி விரிவாக பேசினார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை ஈஷா மையத்தில் நடந்த மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று பங்கேற்று பேசினார். அப்போது பாலின சமநிலையில் மொத்த உருவமாக சிவபெருமான் உள்ளார் என கூறிய அவர் கடவுள் ராமன் மற்றும் ராவணன் ஆகியோர் ஏன் சிவபெருமானை வழிபட்டனர் என்பது பற்றி குட்டிக்கதை கூறி விளக்கினார்.

மகாசிவராத்திரி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று தமிழ்நாடு வந்தார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரெளவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு இன்று முதல் முறையாக வந்தார்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை வந்த அவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அங்கிருந்து கோவை வந்தார்.

ஈஷாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு

ஈஷாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு

கோவை ரேஸ்கோர்ஸில் ஓய்வெடுத்த திரெளபதி முர்மு மாலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்றார். அவரை ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். அதன்பிறகு பேட்டரி காரில் அந்த மையத்தை சுற்றி பார்த்த திரெளபதி முர்மு தியானலிங்கம், யோகேஸ்வர லிங்கத்தை வழிபட்டார். மேலும் தீர்த்த குளத்தை பார்வையிட்டார். திரெளபதி முர்முவுடன் ஆளுநர் ஆர்என் ரவி, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். அதன்பிறகு நடந்த மகா சிவராத்திரி விழாவில் திரெளபதி முர்மு பங்கேற்றார். இந்த விழாவில் திரெளபதி முர்மு பேசியதாவது

 பாலின சமநிலை

பாலின சமநிலை

நாம் சிவபெருமானை தந்தை என்றும், 'சிவபாபா' என்றும் அழைக்கிறோம். அவர் அர்த்த நாரீஸ்வரர் வடிவில் பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் தோன்றுகிறார். இன்று நாம் பாலின சமநிலை என்று சொல்வது அந்த உருவத்தில் மிகவும் அழகாக உயிர்ப்புடன் இருக்கிறது. சில சமயங்களில் சிவன் என்பது நமது மத உணர்வு மற்றும் ஆன்மிகச் சிந்தனையின் மொத்த உருவமாக இருப்பது ஆச்சரியமளிக்கும். உலகெங்கிலும் உள்ள பல்வேறு மரபுகள் என்பது பக்தி அல்லது பக்தியின் பாதையில் தான் உள்ளன. சிவபெருமான் ஒருவரே இந்த வழியில் வழிகாட்டும் ஒளியாக உணரப்படுகிறார். சிவபெருமான் ஒவ்வொருவருக்கும் பொருந்தக்கூடிய பல்வேறு தோற்றங்களில் தோன்றுவதால் அனைவருக்கும் தெய்வமாக இருக்கிறார்.

ராமர், ராவணன் வணங்கிய தெய்வம்

ராமர், ராவணன் வணங்கிய தெய்வம்

சிவபெருமான் பெயருக்கு ஏற்றார்போல் ஒரு கருணையுள்ள தெய்வம். ஆனாலும் பல புராணங்களிலும் அவர் பயமுறுத்தும் தெய்வமாக சித்தரிக்கப்படுகிறார். அவருக்கு மற்றொரு பெயராக 'ருத்ரா' உள்ளது. ராமர் மற்றும் ராவணன் இருவரும் அவரை வணங்கினர். அதன்படி பார்த்தால் கருணை மற்றும் அதன் எதிர்பத ஆற்றல் ஆகியவற்றின் சின்னமாக சிவபெருமான் உள்ளார். இப்படிப்பட்ட கடவுளுக்கு முன்பாக மனிதர்களாகிய நாம் பயந்து வணங்குவதைத் தவிர? என்ன செய்ய முடியும். இதைத்தான் நான் 'ஓம் நம சிவா' என்ற மந்திரத்துடன் இந்த உரையை தொடங்கினேன்.

நவீன அறிவியலும், சிவபெருமானும்

நவீன அறிவியலும், சிவபெருமானும்

நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இவை அனைத்தும் கட்டுக்கதைகளின் வடிவமாக தான் இருக்கலாம். இருப்பினும், நவீன அறிவியலும் சிவனின் சில ரகசியங்களை அவிழ்க்கத் தொடங்கியுள்ளது. இது ஆச்சரியமாக உள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்பியல் புதிய பரிணாமத்தை அடைந்தது. விஞ்ஞானிகள் அணு துகள்களின் இயக்கங்களை படங்களாக உருவாக்கி விளக்கினர். அது பாரம்பரிய சிற்பங்களில் நடனமாடும் சிவன் அல்லது நடராஜரின் வடிவத்தைபோல் ஒத்திருந்தன. அதனால்தான் பல கற்றறிந்த நம்பிக்கையற்றவர்களும் சிவபெருமானைக் கண்டு வியந்து நிற்கின்றனர். இன்று மகாசிவராத்திரி. இது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம் முடிந்து வெயில் காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. மஹாசிவராத்திரி இருளின் முடிவைக் குறிக்கிறது. அறியாமை எனும் இரு இருளை நீக்கி ஞானம் பெறும் காலம் இதுவாகும்.

இருளை அகற்றட்டும்

இருளை அகற்றட்டும்

சத்குரு உலகின் எல்லா மூலைகளிலும் போதனைகள் செய்கிறார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து எண்ணற்ற மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஆன்மிகத்தை தேட உத்வேகம் அளிக்கிறார். இன்று உலகம் எப்போதும் போல் சண்டையிட்டு கொள்கிறது. நெருக்கடியை சந்திக்கிறது. இந்த மகாசிவராத்திரி நமக்குள் இருக்கும் இருளை போக்கி நம் அனைவரையும் இன்னும் நிறைவான மற்றும் செழிப்பான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லட்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்'' என பல விஷயங்களை கூறி அவர் தனது பேச்சை முடித்து கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+