"நன்றிங்க".. டக்குனு மனசு மாறி.. என்ன திடீர்ன்னு வானதி இப்படி சொல்றாங்க.. அதுதான் காரணமோ?

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் செய்யப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்த நிலையில்.. நேற்று அவர் பேசிய சில விஷயங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் குறைந்துள்ளது. தினசரி கேஸ்கள் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறைந்துள்ளன.

கோவையில் கடந்த வாரங்களில் கொரோனா கேஸ்கள் அதிகம் வந்த நிலையில், அங்கு செலுத்தப்பட்ட தனிப்பட்ட கவனம் காரணமாக, அங்கும் கேஸ்கள் வேகமாக சரிய தொடங்கி உள்ளன.

கேஸ்கள் குறைவு

கேஸ்கள் குறைவு

கோவையில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் அது தொடர்பாக தொடர் விமர்சனங்களை வைத்து வந்தார். அதன்படி, கோவை புறக்கணிக்கப்படுகிறது, கோவையில் கேஸ்கள் உயர்கிறது. கோவைக்கு வேக்சின் கொடுக்கப்படவில்லை என்றெல்லாம் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்தார்.

வேக்சின்

வேக்சின்

ஆனால் கோவைக்கு தமிழ்நாடு அரசு கோவைக்குத்தான் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் வேக்சின்களை அளித்து வந்தது. மே மாதத்தில் சென்னைக்கு அடுத்தபடி கோவைக்குத்தான் அதிக வேக்சின் அனுப்பப்பட்டது. அதன்பின் கடந்த வாரம் தமிழகம் வந்த 495570 டோஸ் வேக்சின்கள் இரவோடு இரவாக மாவட்டங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இதிலும் சென்னைக்கு அடுத்து கோவைக்குத்தான் இதில் அதிக வேக்சின் ஒதுக்கப்பட்டுள்ளது.

மே மாதம்

மே மாதம்

மே மாதம் கோவைக்குத்தான் சென்னைக்கு அடுத்து அதிக வேக்சின் கொடுக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் கொடுக்கப்பட்ட முதல் கட்ட ஒதுக்கீட்டிலும் சென்னைக்கு அடுத்து கோவைதான் முக்கியத்துவம் பெற்றது. சென்னைக்கு 54570 டோஸ் கோவிட்ஷீல்ட் வேக்சின் ஒதுக்கப்பட்டது. 10000 கோவாக்சின் ஒதுக்கப்பட்டது. கோவைக்கு 40000 டோஸ் கோவிட்ஷீல்ட் வேக்சின் ஒதுக்கப்பட்டது, 8000 கோவாக்சின் ஒதுக்கப்பட்டது.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில் கோவை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி வந்த வானதி சீனிவாசன் திடீரென மனம் மாறிற்று.. கோவைக்கு அதிக வேக்சின் கொடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்று கூறியுள்ளார். அதோடு தமிழ்நாட்டிற்கு வேக்சின் அனுப்பிய மத்திய அரசுக்கும் நன்றி என்று வானதி சீனிவாசன் தனது பெட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

என்ன ஆச்சு

என்ன ஆச்சு

தமிழ்நாட்டில் வேக்சின் கொடுப்பதில் வேறுபாடு காட்டப்படுகிறது என்று கூறி வந்த வானதி தற்போது மனம் மாறியுள்ளார். தமிழ்நாடு அரசு கோவைக்கு கூடுதல் வேக்சின் ஒதுக்கியது ஒரு காரணமாக இருந்தாலும்.. மத்தியில் நிலவும் வேக்சின் தட்டுப்பாடு இதற்கு ஒரு காரணம் என்றும் கூறுகிறார்கள். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு போதிய வேக்சின் கொடுப்பது இல்லை. தேவையான வேக்சின் தமிழ்நாட்டிற்கு தகுந்த நேரத்தில் வருவது இல்லை.

காரணம்

காரணம்

இதையடுத்து மத்திய பாஜக அரசை தமிழ்நாடு அரசு விமர்சனம் செய்தது. வானதி பாஜக தானே அவர் முடிந்தால் பேசி மத்திய அரசிடம் இருந்து வேக்சின் வாங்கி தரட்டும்.. கோவைக்கு நாங்கள் போதிய வேக்சின் அனுப்பிவிட்டோம், மத்திய அரசுதான் தமிழக அரசை புறக்கணிக்கிறது என்றும் கூட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டு இருந்தார்.

புள்ளி விவரம்

புள்ளி விவரம்

கோவை புறக்கணிக்கப்படவில்லை என்பதற்கான புள்ளி விவரங்களையும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், வானதி சீனிவாசன் திடீரென மனம்மாறி.. தமிழ்நாடு அரசை பாராட்டி உள்ளார். மத்திய அரசு போதிய வேக்சின் அனுப்பவில்லை, தமிழகத்தில் போதிய வேக்சின் கையிருப்பு இல்லை, தட்டுப்பாடு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு அவர் இப்படி இப்படி மனம் மாறி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+