கோவை மருதமலைக்கு அதிகாலையிலேயே முதல் ஆளாக வந்த முரட்டு முருக பக்தன்.. நடந்ததை பாருங்க
கோவை: கோவை மருதமலையில் புகழ் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் இருக்கிறது. இந்த கோயில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இங்கு அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்வது வழக்கம். காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் மாலை நேரத்தில் உலா வருவதை பார்க்க முடியும். இந்த சூழலில் நேற்று அதிகாலையில் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், காட்டு யானையும் வந்துவிட்டது.. இதனால் பக்தர்கள் பீதியடைந்தனர்.
கோவை மருதமலையில் பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்திருக்கிறது. முருகனின் ஏழாவது வீடு என்று போற்றப்படும் இந்த கோவில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. 1200 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மலைக்கு வரும் பக்தர்கள் மலைக்கு செல்வதற்காகவே உள்ள படியேறி கோவிலுக்கு நடந்து செல்கிறார்கள். நடந்து செல்ல இயலாதவர்களுக்காக கோயில் நிர்வாகம் மினி பேருந்துகளை இயக்கி வருகிறது. மருதமலை முற்றிலும் வனப்பகுதியில் உள்ள இடம் என்பதால், அடிக்கடி காட்டுயானைகள், காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்கின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் குவிந்தனர்.
இந்நிலையில் காலை 6 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை மருதமலை அடிவார பகுதிக்கு வந்துவிட்டது. பின்னர் அந்த யானை மலைப்பாதை வழியாக மயில் மண்டபத்திற்கு சென்றது. தொடர்ந்து காட்டு யானை அந்த பகுதியில் உலாவிக்கொண்டிருந்தது. இதனால் பீதி அடைந்த பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை வனப்பகுதிக்குள் செல்ல மறுத்து அங்கேயே உலாவியது. பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றபிறகு மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மலையடிவாரத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதனிடையே மருதமலை கோவில் பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் வருவதால், மலைக்கோவிலுக்கு அதிகாலையில் வரும் பயணிகள் கவனமாக இருப்பது நல்லது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications