பாஜக "ஆபரேஷன் 25".. அடித்து பேசிய அண்ணாமலை! திரும்பி பார்த்த அதிமுக! என்ன முடிவு எடுப்பார் எடப்பாடி?
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் 25 இடங்களில் லோக்சபா தேர்தலில் பாஜக வெல்லும் என்று அந்த கட்சி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் அந்த கட்சிக்கு 25 இடங்கள் கிடைக்குமா என்ற அடிப்படை கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள், விவாதங்கள் ஏற்கனவே நடக்க தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது.
கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள்.

பாஜக கூட்டணி
அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார். எடப்பாடி பழனிசாமி இப்படி சொன்னதும்.. உடனே கூட்டணி குறித்த பல்வேறு விவாதங்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எழுந்தது. அதன்படி பாஜக - அதிமுக - பாமக - தேமுதிக - புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி வைக்கலாம் என்று பல்வேறு வாதங்கள் இணையத்தில் வைக்கப்பட்டன.

மெகா கூட்டணி
பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த கூட்டணியை வரவேற்று பேசி இருந்தார். அதில் அதிமுக தலைமையில் செயல்பட நாங்கள் தயார். இதில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக பெரிய கட்சி. அவர்கள் தலைமையில் நாங்கள் செயல்பட தயார். 2024 தேர்தல் மிக முக்கியமானது. இந்த தேர்தலில் நாங்கள் பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதுவோம். யார் பலமான கட்சி என்பது அந்த தேர்தலில் நாங்கள் நிரூபிப்போம், என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

எடப்பாடி பேச்சு
ஆனால் பல்வேறு அரசியல் வல்லுனர்களோ.. எடப்பாடி மெகா கூட்டணி என்று சொன்னது பாஜக + அதிமுக கூட்டணி பற்றி அல்ல. அவர் சொன்ன கூட்டணி அதிமுக +காங்கிரஸ் + கம்யூனிஸ்ட்கள் + விசிக + மநீம அமைக்க உள்ள கூட்டணி. அதைத்தான் எடப்பாடி மெகா கூட்டணி என்று சொல்கிறார் என்று அரசியல் வல்லுனர்கள் பலர் குறிப்பிட்டு இருந்தனர். அதோடு பாஜக கூட்டணியை கழற்றிவிட எடப்பாடி தயாராகி வருவதாகவும் கூறி வந்தனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் எடப்பாடியும்.. அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். சிறுபான்மையினர் வாக்குகளை பாஜகவால் இழந்துவிட்டதாக அதிமுக கருதுவதால் இந்த முடிவை எடப்பாடி எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டம்
நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசும் போது கூட, கூட்டணி பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதில் நாங்கள் நல்ல முடிவை எடுப்போம். பாஜக நம்மை கட்டுப்படுத்துவதாக சிலர்நினைக்கிறார்கள். நம்மை பாஜக நெருக்கடி கொடுத்து கட்டுப்படுத்தி வருகிறது என்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. பாஜக நம்மை இதற்கு முன்பு கட்டுப்படுத்தியது இல்லை. இப்போதும் கட்டுப்படுத்தியது இல்லை. நாடளுமன்ற தேர்தல்களில் நாம்தான் முடிவு எடுப்போம். என்ன கூட்டணி அமைய வேண்டும் என்று நாம் முடிவு எடுப்போம். நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார் எடப்பாடி.

சிவி சண்முகம்
இன்னொரு பக்கம் சிவி சண்முகமும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்பதை இலைமறை காயாக சொல்லி இருந்தார். சமீபத்தில் சி வி சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திமுக - பாஜக காட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் : தமிழ்நாட்டில் 25 இடங்களில் லோக்சபா தேர்தலில் பாஜக வெல்லும் என்று அந்த கட்சி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் அந்த கட்சிக்கு 25 இடங்கள் கிடைக்குமா என்ற அடிப்படை கேள்வி எழுந்துள்ளது.

அண்ணாமலை பேச்சு
நேற்று கோவையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் 25 எம்பிகளுக்கு மேல் வெல்லும். பாஜக கட்சியில் இருந்து 25+ நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள். தமிழ்நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் மோடிக்கு தெரியும். நாம் மோடிக்கு தேவையான எம்பியை கொடுத்தால், அந்த எம்பிக்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டியதை எல்லாம் கொடுப்பார்கள். இதற்கான பணிகளை நாம் செய்ய வேண்டும். முக்கியமாக பூத் கமிட்டியை நாம் வலுப்படுத்த வேண்டும், என்று அண்ணாமலை பேசி இருந்தார்.

நடக்குமா?
பாஜக கூட்டணியை கழற்றிவிட எடப்பாடி நினைத்துக்கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில்தான் அண்ணாமலை இப்படி பேசி இருக்கிறார். பாஜக கூட்டணியை எடப்பாடி விரும்பாத பட்சத்தில் பாஜகவிற்கு 25 இடங்களை எடப்பாடி ஒதுக்குவாரா? அதிமுக கூட்டணியில் இவ்வளவு இடங்களை பாஜகவிற்கு கொடுக்க தயாராக இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பாஜக எம்பி தேர்தலில் வெல்லவில்லை. அப்படி இருக்க 25 இடங்களை வெல்ல வேண்டும் என்றால் குறைந்தது 27- 30 இடங்களிலாவது நிற்க வேண்டும். இத்தனை இடங்களை பாஜக எடப்பாடி கொடுக்க முன்வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!











Click it and Unblock the Notifications