பந்த் என்று மக்களை மிரட்டினால் கடும் நடவடிக்கை.. ஜாக்கிரதை! அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி எச்சரிக்கை
கோயம்புத்தூர்: கோவையில் பந்த் என்று கூறி கடைக்காரர்களை இவர்கள் மிரட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏதாவது கட்சிக்காரர்கள் மக்களை மிரட்டி பந்த் நடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு தொடர்பாக பந்த் நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது. அக்டோபர் 31ம் தேதி கோவை மாவட்ட பாஜக சார்பாக இந்த பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர் பந்த்
இந்த நிலையில் கோயம்புத்தூர் பந்த் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பேட்டி அளித்தார்,
அதில், கோவையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிட்டதால் பந்த் நடத்துகிறேன் என்று அவர்கள் கூறுகிறார்கள். கோவை எங்கே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கார் வெடிப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்க கூடியதுதான். ஆனால் இதன் காரணமாக எங்கேயும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வில்லை. உடனே குற்றவாளிகளை கண்டுபிடித்து உள்ளோம். 10 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை பிடித்து உள்ளோம். தீபாவளி நன்றாக சென்றது.

தீபாவளி
மக்கள் எப்போதையும் விட இந்த முறை சிறப்பாக தீபாவளியை கொண்டாடினார்கள். ஆனால் மக்கள் வாழ்க்கை பாதித்துவிட்டது என்று கூறி இவர்கள் பந்த் செய்வது தவறு. பந்த் என்று கூறி கடைக்காரர்களை இவர்கள் மிரட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏதாவது கட்சிக்காரர்கள் மக்களை மிரட்டி பந்த் நடத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பந்த் என்று கூறி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்.

பதற்றம்
எதாவது செய்து.. எப்படியாவது மக்கள் மத்தியில் பதற்றத்தை உண்டு பண்ண கூடாதா என்று சிலர் நினைக்கிறார்கள். நீங்கள் ஒருவரை பற்றி கேள்வி கேட்கிறீர்கள் (அண்ணாமலை).. அவரும் கூட சீருடை அணிந்த நபர்தான். அவர் விசாரணை அதிகாரியாக இருந்த போது பொதுவில் அனைத்தையும் சொல்ல முடியுமா? யூகத்தின் அடிப்படையில் பேச முடியுமா? முழுதாக விசாரணை செய்த பின்புதான் பேச முடியும். அவரை மாதிரி நாங்கள் பேச முடியுமா?

அண்ணாமலை
அவருக்கு அடிப்படை புரிதல் இல்லை என்பதை விட.. அவருக்கு அடிப்படை அரசியல் தெரியவில்லை. அரசியல் பக்குவமில்லை. அரசியலில் எந்த விதமான புரிதலும் இல்லாமல் செயல்படுகிறார். மக்களுக்கு ஏதாவது அவர் செய்ய வேண்டும். மாறாக மின்சார துறை தாக்கலாமா.. மருந்து தட்டுப்பாடு என்று வதந்தி பரப்பலாமா.. ரேஷன் பற்றி வதந்தி பரப்பலாமா என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். எதையாவது செய்து மக்களை தங்கள் பக்கம் இழுக்கலாமா என்று நினைக்கிறார்.

இழுக்க முடியும்
எதை செய்தால் மக்களை தங்கள் பக்கம் இழுக்க முடியும். எதை செய்தால் பித்தம் தெளியும் என்று அவர் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். இது மோசமான செயல். என்ன ஒரு மட்டக்கரமான அரசியலை அவர் செய்கிறார். அவர்கள் நினைக்கிற மாதிரி ஏதும் இங்கே செய்ய முடியாது. மக்கள் அவர்களின் திட்டங்களுக்கு எல்லாம் வீழ மாட்டார்கள், என்று செந்தில் பாலாஜி குறிப்பிட்டு உள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications