விஜய் அமித்ஷாவை சந்திப்பாரா? டெல்லிக்காரங்க சரியாக செய்வாங்க.. வானதி சீனிவாசன் பேட்டி
கோவை: என்னை எதிர்த்து போட்டியிட்ட கமல் இப்போது எங்கு இருக்கிறார் (திமுக கூட்டணியில் இருக்கிறார்)? நாளை விஜய் கட்சியினர் என்னை எதிர்த்து போட்டியிட்டால் அவர்கள் எங்கு இருப்பார்கள் என அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். விஜய் அமித்ஷாவை சந்திப்பாரா? என்ற கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.
கோவை புலிகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் கல்லூரியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிதாக ஆறு வகுப்புகள் கொண்ட கட்டிடங்களை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறுகையில், "கோவையில் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் கட்டி கொடுக்கிறோம். 2.46 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டி கொடுக்கிறோம்.. எம்எல்ஏ நிதியில் இருந்து ஒதுக்கி உள்ளோம்.

அதிகமான பெண்கள் வகுப்பறைக்கு வந்து கொண்டு உள்ளார்கள்..பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அரசு நிதி உதவி கிடைப்பதில் சிரமம் உள்ளது. பெண் கல்லூரி அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பதால் நிதியை ஒதுக்கி பணி செய்து வருகிறோம். உயர் கல்வியில் ஏழை கல்லூரி மாணவிகள் பயன் பெற வேண்டும்..
S I R பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். 11 தேதி வரைக்கும் நீட்டிக்கபட்டு உள்ளது.. பட்டியலில் பெயர் சரியாக இணைக்கப்பட்டு உள்ளதா என ஆன்லைன் ஒருமுறை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். தேர்தல் பணிகளை பாஜக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.. வரும் 7 தேதி மாவட்டம் முழுவதும் கூட்டம் நடத்த இருக்கிறோம். கோவைக்க அமித்ஷா வருகை இன்னும் உறுதி ஆகவில்லை.
திருப்புறகுன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது இந்துக்களின் கனவு. மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது. திமுக இதை இரண்டாம் பட்சமாக பார்க்கிறது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அரசு சென்றுள்ளது. திமுக சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலர்கள் போன்று வேஷம் போடுவார்கள். திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலை உருவாக்க தமிழ்நாடு அரசு முயல்கிறது..
தமிழகத்தில் இன்னும் ஒரு மாத காலத்தில் வலுவான கூட்டணி உருவாகும். நாங்கள் தான் பலமாக உள்ளோம்..கம்யூனிஸ்ட், காங்கிரஸ் பெரிய கட்சியா?? என கேள்வி எழுப்பினார். விஜய் அமித்ஷாவை சந்திப்பாரா என்று கேட்குறீர்கள் - யாரை? யார்? எப்ப பார்க்க வேண்டும் என்பதை டெல்லி தலைவர்கள் சரியாக செய்வார்கள்.
மேலும் திமுக வாக்குகள் நிச்சயம் பிரியும்.. திமுகவினரே இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என முடிவு செய்து விட்டார்கள். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா என்பது என்பது 2026 தேர்தலுக்கு பின் பேசலாம். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட கமல் கட்சி இப்போது எங்கு உள்ளது? திமுகவில் இருக்கிறது. அதேபோன்று என்னை எதிர்த்து விஜய் கட்சி போட்டியிட்டால் அவர்கள் எங்கு இருப்பார்கள் என அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்கிறேன்" இவ்வாறு வானதி சீனிவாசன் பேட்டியின் போது கூறினார்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications