ஒன்றரை வயது பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு.. தூக்கிட்டு தற்கொலை செய்த தாய்.. கோவையில் ஷாக்!
கோவை: கோவையில் ஒன்றரை வயது குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிணத்துக்கடவை அடுத்த நெகமம் தாளக்கரை பகுதியைச் சேர்ந்த கதிரவன் என்பவரின் மனைவி தமிழ்ச்செல்வி (26). இவர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு திருமணமாகி ஒரு வயது மூன்று மாதங்கள் ஆன யாசவி என்ற பெண் குழந்தை உள்ளது.
கதிரவன் விவசாய வேலை செய்து வருகிறார் . தமிழ்ச்செல்வி கடந்த சில மாதங்களாக தைராய்டு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தமிழ்ச்செல்விக்கு வயிற்றுவலியும் இருந்ததாக கூறப்படுகிறது.

குழந்தை
தமிழ்ச்செல்வி சிறு சிறு விஷயங்களுக்கு கூட எல்லோரிடமும் சண்டைபோட்டு கோபித்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனது அம்மா கனக மணிக்கு போன் செய்து தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் தனது குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறும் கூறியிருக்கிறார்.

வெகுநேரம்
இதனால் அதிர்ச்சி அடைந்த கனகமணி தனது குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு நெகமத்தில் உள்ள தமிழ்ச்செல்வி வீட்டிற்கு நேற்று மாலை வந்தனர். அப்போது வீட்டின் உள்புறம் பூட்டப்பட்டு இருந்தது. கதவை வெகுநேரம் தட்டியும் திறக்காததால் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்தனர்.

பிரேத பரிசோதனை
அப்போது தமிழ்ச் செல்வியும் குழந்தை யாசவியும் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சோகம்
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தை யாசவியை கொன்று பின்னர் தாய் தமிழ்செல்வியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நெகமும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கோவை சாய்பாபா காலனியில் திவ்யா போட்ட ஆட்டம்.. மகன் மீது ஈவிரக்கம் இல்லையா? ஆண் நண்பருக்காக இப்படியா? -
கோவை விபரீதம்.. நீட் தேர்வு அச்சத்தால் பிள்ளைகள் தவறான முடிவெடுப்பது ஏன்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications