நாகர்கோவில் இளைஞரால் அதிர்ந்த கோவை.. காதலி பேசாததால் ஆத்திரம்.. செவிலியருக்கு கத்திக்குத்து
கோவை: கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையான குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் செவிலியரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமீபகாலமாக மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, காதலிக்கும் இளைஞர்கள் காதலை மறுத்தாலோ அல்லது பாதியிலேயே காதலிப்பதை நிறுத்தி விட்டாலோ சம்பந்தப்பட்ட பெண்கள் மீது தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், காதலி பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தியதால் நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் கோவை தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அவிநாசி சாலையில் உள்ளது குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் கனிஷ்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் செவிலியராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த மருத்துவமனையில் உள்ள மகளிர் விடுதியில் கனிஷ்கா தங்கி பணியாற்றி வந்துள்ளார். கனிஷ்காவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலைச் சேர்ந்த சுஜித் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
ஒருகட்டத்தல் சுஜித்தின் செயல்பாடுகள் பிடிக்காததால் கனிஷ்கா அந்த இளைஞருடன் பேசுவதையும், பழகுவதையும் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் உள்ள மகளிர் விடுதிக்குள் சுஜித் அனுமதியில்லாமல் நுழைய முயற்சி செய்துள்ளார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விடுதிக் காப்பாளர் இளைஞர் சுஜித்தை தடுத்துள்ளார்.
ஆனால், அந்த இளைஞர் அவரை கடும் சொற்களால் பேசி அவரை தள்ளிவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது, சுஜித் கனிஷ்காவின் கழுத்தை நெரித்துள்ளார். தொடர்ந்து, கத்தியால் குத்த முயன்றுள்ளார். அப்போது பிரியா அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அதில் அவருடைய கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த விடுதிக் காப்பாளர்கள் மற்றும் மருத்துவமனையின் காவலாளிகள் சுஜித்தை பிடித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து விடுதிக் காப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சுஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸார் அந்த இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கனிஷ்காவும், சுஜித்தும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சுஜித்தின் நடவடிக்கை பிடிக்காததால் திடீரென அவரிடம் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தியுள்ளார் கனிஷ்கா. திடீரென அந்தப் பெண் பேசுவதை நிறுத்தியதால் கடும் ஆத்திரமடைந்த சுஜித் கனிஷ்கா மீது இந்த கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையில் செவிலியரின் குடும்ப பிரச்சனை காரணமாக அவரை அவரது கணவர் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
-
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications