கோவை: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி கைது!
கோவை: கோவையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான வாலிபரை போலீசார் முன்னிலையில் பெண்கள் அடிக்க பாய்ந்ததால் காவல்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை காட்டூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் அங்குள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில், திருச்சியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் பணியாற்றி வந்தார்.
ஞாயிறன்று அந்த கட்டிடத்திற்குள் அச்சிறுமியை அழைத்து சென்ற விக்னேஷ், அங்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து திங்கட்கிழமையன்று அச்சிறுமி அவரது தாய் ரேவதியிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், காவல் துறையினர் சிறுமியை பலாத்காரம் செய்தது, குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 2 சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட விக்னேஷை காவல் நிலையம் அழைத்து வந்தபோது, அங்கு கூடியிருந்த பெண்கள் அவனை அடிக்கப்பாய்ந்தனர். சிலர் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். கைது செய்யப்பட்ட விக்னேஷ், கோவை மகளிர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.












Click it and Unblock the Notifications