"போதை" ஏறி போச்சு.. யூடியூபை பார்த்து போதை மருந்து தயாரிக்கும் கோவை இளைஞர்கள்.. வைரல் வீடியோ
கோவை: கோவை மாவட்டத்தில் போதை ஊசியை போடும் இளைஞர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கோவை மாவட்டத்தில் இரவு நேரத்தில் இளைஞர் சிலர் போதை ஊசியை செலுத்தி கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் இளைஞர்கள் அவர்களாகவே போதை மருந்துகளை பொடியாக்கி அதனை நீரில் கரைத்து ஊசியின் மூலம் நரம்பில் செலுத்திக் கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அந்த குழுவினர்
இதனை அங்கிருந்த ஒருவர் (குழுவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது) வீடியோ எடுத்துள்ளார். அதில் சிலரது பெயர்களும் கூறி இருக்கும் ஆடியோவும் பதிவாகியுள்ளது. அதில் இளைஞர்கள் ஆபாச வார்த்தைகளையும் பேசியுள்ளனர்.

வாட்ஸ் ஆப் குழு
இந்த வீடியோவானது தற்பொழுது வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் காவல் துறையினர் இந்த பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யூடியூப் மூலம்
மேலும் இந்த இளைஞர்கள் யூடியூப் மூலம் எப்படி போதை ஊசியை தயாரிப்பது என பார்த்து அதை அப்படியே செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது போல் போதை ஊசிகளை செலுத்திக் கொள்வதால் மரணம் நிகழ வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

நல்லது
யூடியூப் மூலம் நல்லதை பார்த்துக் கற்று கொள்ளாமல் இது போல் தீயதையும் உயிரையே எடுக்கும் விஷயங்களையும் கற்று கொள்கிறார்களே என மக்கள் கவலையடைந்துள்ளனர். இது போன்ற கேடு விளைவிக்கும் யூடியூப் வீடியோக்களை முடக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
-
அவிநாசி சாலையில் 5 நாட்களுக்கு அதிரடி மாற்றம்.. கோவை பயனீர் மில் கிட்ட அதை கவனிச்சீங்களா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications