140 கேஸ் சிலிண்டர்... டன் கணக்கில் அரிசி.. பருப்பு பதுக்கி வைத்த ராஜபக்சே கும்பல் - சூறையாடிய மக்கள்
இலங்கையில் அத்தியாவசியப்பொருட்கள் இல்லாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் ராஜபக்சே குடும்பத்தினர் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர்.
கொழும்பு: இலங்கையின் முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்சே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ மற்றும் குருநாகல் பிரதேச சபையின் தலைவர் அச்சல நிமந்த ஆகியோரின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பொருட்களை மக்கள் சூறையாடியுள்ளனர்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை அந்த நாடு சந்தித்துவருகிறது. உணவு, அத்தியாவசியப் பொருள்கள், எரிபொருள், எரிவாயு ஆகியவற்றுக்கு பல வாரங்களாக கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.
இலங்கையில் அந்நிய செலாவணி பற்றாக்குறையால், வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால், அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. ஆளும் இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியிலும் மஹிந்த ராஜபக்சேக்கு எதிர்ப்புகள் அதிகரித்தன.

வன்முறை ரத்தக்களறி
மஹிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில் அவரது ஆதரவாளர்களும் குண்டர்களும் குண்டர்கள் கம்பு, இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை என ஆயுதங்களுடன் சென்று பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஒட்டியும், காலி முகத்திடலிலும் போராட்டம் நடத்தி வந்த மக்களை நடுரோட்டில் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் 78 பேர் படுகாயமடைந்தனர்.

ஓட ஓட விரட்டிய மக்கள்
தாக்குதலால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், மஹிந்தா ஆதரவாளர்கள் மீது அவர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக, அப்பகுதியே போர்க்களமாக மாறியது. மகிந்தா ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள், அவர்கள் வந்த பஸ்சையும் ஜேசிபி இயந்திரம் மூலம் உடைந்தெறிந்தனர். சம்பவ இடத்திற்கு ராணுவம் குவிக்கப்பட்டு, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மாளிகைகளுக்கு தீ வைத்த மக்கள்
மஹிந்தா ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து, குருணாகல் நகர பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் கொழும்புவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தினர். இதில், குருணாகலில் உள்ள மகிந்த வீட்டை தீவைத்து எரித்தனர். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய மக்கள், உள்ளே செல்ல பலமுறை முயன்றனர். பொதுஜன பெரமுனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த்தின் வீட்டை சிலர் தீ வைத்து எரித்தனர். புத்தளம் பகுதியில் உள்ள எம்பியின் வீடு முழுமையாக எரிந்து நாசமானது. குருணாகல் நகர மேயர் வீடும் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதே போல பல அமைச்சர்களின் வீடுகள், ஆளும்கட்சி எம்பிக்கள் வீடுகளின் மீதும் பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளனர்.

அத்தியாவசியப்பொருட்கள் பதுக்கல்
சமல், மஹீபால ஹேரத், ஜொன்ஸ்டன் ஆகியோரின் வீடுகளில் இருந்த மூடை மூடையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த அத்தியாவசியப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பொதுமக்களால் தீ வைத்து அழிக்கப்பட்ட ஆளுந்தரப்பின் முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் சூறையாடியதோடு பலருக்கும் பகிர்ந்து அளித்தனர்.

கைப்பற்றிய மக்கள்
சமல் ராஜபக்சே, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹீபால ஹேரத், துஷார சஞ்சீவ, மற்றும் குருநாகல் பிரதேச சபை தவிசாளர் அசல நிமந்த ஆகியோரின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அத்தியாவசியப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கேஸ் சிலிண்டர்கள் பதுக்கல்
அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் வீதிகளில் மணிக்கணக்கில் காத்திருந்த நிலையில் கேஸ் சிலிண்டர்கள், ரசாயன உரம், டீசல், பருப்பு போன்ற பொருட்கள் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து போராட்டக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். குருநாகலையில் ஜொன்ஸ்டன் வீடு, துஷார சஞ்சீவ வீடு, அசல நிமந்த ஆகியோரின் வீடுகளில் இருந்து மாத்திரம் 12.5 கிலோகிராம் எடை கொண்ட 140 கேஸ் சிலிண்டர்கள் நிரப்பிய நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உர மூட்டைகள் கைப்பற்றல்
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் லேக் ரோட் வீட்டில் மட்டும் 80க்கும் அதிகமான லாப் கேஸ் சிலிண்டர்கள் எரிவாயு நிரப்பிய நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. திஸ்ஸமகாராம, கிரிந்த, மாகம பிரதேசத்தில் அமைந்துள்ள சமல் ராஜபக்ஷவின் வீட்டில் இருந்து 300 மூடை யூரியா பசளை, டீசல் 3000 லீட்டர், 200 மூட்டை நெல், மற்றும் மூடை மூடையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பருப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அவை பின்னர் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
Recommended Video

பகிர்ந்தளித்த போராட்டக்காரர்கள்
மஹிபால ஹேரத்துக்கு சொந்தமான பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேச விவசாயப் பண்ணை ஒன்றில் நானூறுக்கும் அதிகமான யூரியா உர மூடைகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு அவை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications