• search
கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரசாயன உரங்களுக்கு தடை எதிரொலி: 6 லட்சம் டன் தரமில்லா அரிசி இறக்குமதி.. புலம்பும் இலங்கை அமைச்சர்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் தவறான கொள்கையினால் தற்போது நாட்டில் நச்சுத்தன்மை கொண்ட, தரமற்ற 6 லட்சம் டன் அரிசி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று இலங்கை. நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட தீவு தேசமான இலங்கை இயற்கை வளங்கள் நிறைந்தது.

இலங்கையில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதத்தினர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விவசாயத்தை நம்பியே உள்ளனர்.

ரூ.1 -க்கு மூன்று வேளையும் உணவு! முதலமைச்சர் ஸ்டாலின் இதயத்தை நனைத்த ஈரோடு தம்பதியின் ஈரமனது! ரூ.1 -க்கு மூன்று வேளையும் உணவு! முதலமைச்சர் ஸ்டாலின் இதயத்தை நனைத்த ஈரோடு தம்பதியின் ஈரமனது!

 ரசாயன உரங்களுக்கு தடை

ரசாயன உரங்களுக்கு தடை

இந்த நிலையில், இலங்கையில் ஆர்கானிக் பார்மிங் என்று சொல்லப்படும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக கடந்த ஆண்டு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியற்றிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அப்போது இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இந்த தடையை விதித்தார். ஆனால், கோத்தபய ராஜபக்சேவின் கணக்கு முற்றிலும் தவறாகப்போனது.

 வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி

ரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் இலங்கையில் போதிய விவசாய பொருட்கள் உற்பத்தி 50 சதவீதத்திற்கும் கீழ் சரிந்தது. இதன் காரணமாக இலங்கை தனக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு இடையில் அன்னிய செலவாணி நெருக்கடி ஏற்பட்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலும் இலங்கை சிக்கியது. இதனால், இறக்குமதி செய்ய போதிய பணம் இன்றி தவித்தது.

 பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடி

குறிப்பாக அந்த நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்ப பல மணி நேரம் பெட்ரோல் நிலையங்கள் முன் காத்திருக்க வேண்டிய நிலையும் இலங்கையில் நிலவியது. பொருளாதார நெருக்கடியால் விழிபிதுங்கிய இலங்கை மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கொதித்தெழுந்தனர். இதைத்தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலகி தற்போது தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

 நச்சுத்தன்மை கொண்ட அரிசி இறக்குமதி

நச்சுத்தன்மை கொண்ட அரிசி இறக்குமதி

புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார். பிரதமராக தினெஷ் குணவர்தன பதவியேற்றுக்கொண்டுள்ளார். இந்த சூழலில், இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய இலங்கை விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா, ''முந்தைய அரசின் தவறான கொள்கை முடிவால் இலங்கை சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு தரமற்ற, நச்சுத்தன்மை கொண்ட அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

 காரணம் என்ன?

காரணம் என்ன?

இது குறித்து அமரவீரா கூறுகையில், ''சில அமைப்புகளின் நடைமுறைக்கு ஒவ்வாத ஆலோசானைகளை கேட்டு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விரும்பியதன் விளைவு, இன்று நாம் தரம்குறைந்த, நச்சுத்தன்மை கொண்ட அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்டதே நாடு இன்று எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் ஆகும். இலங்கையில் விளையும் அரிசியை விட, இறக்குமதி செய்யப்படும் இந்த அரிசி மிகவும் தீங்கு மிக்கவை. மோனோகுரோடோபாஸ், கிளைபோசேட் ரசாயனங்கள் இலங்கையில் ஒருபோதும் பயன்படுத்தப்பட்டது இல்லை'' என்றார்.

 அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு

அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு

ரசாயன உரங்களுக்கு தடை விதிக்கும் முன்பாக இலங்கை அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், தனது முடிவு 100 சதவீதம் தவறானது என்று ஒப்புக்கொண்டது நினைவிருக்கலாம். இலங்கையில் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நெல் பயிரிடும் யாலா சாகுபடி காலம் உள்ளது. இந்த சாகுபடி காலத்தில் அரிசி உற்பத்தி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்தியா, இலங்கைக்கு 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரங்களை வழங்கியது.

English summary
Due to the wrong policy of the former President Gotabaya Rajapaksa in Sri Lanka, 6 lakh tons of toxic, substandard rice has been imported from foreign countries, the Minister of Agriculture has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X