நான் சொன்னதை செய்! கோத்தபய வீட்டில் எடுக்கப்பட்ட பல லட்சம்.. "ஆட்டையை" போட பார்த்த போலீஸ்! பின்னணி
கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் கிடைத்த பல லட்சம் பணத்தை போலீஸ் அதிகாரி ஒருவர் அபகரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து அங்கு மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். நேற்று இலங்கையில் அதிபர் அலுவலகம் மற்றும் வீட்டை போராட்டகாரர்கள் கைப்பற்றினார்கள். நேற்று பிற்பகலில் இலங்கை அதிபர் வீட்டிற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.
இதையடுத்து போராட்டக்காரர்கள் வருவது தெரிந்து அதிபர் அங்கிருந்து வெளியேறினார். நேற்று மாலையில் இருந்து தற்போது வரை அதிபர் வீட்டில் இருந்தபடியே மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

பணக்கட்டுகள்
கோத்தபய ராஜபக்சே வீட்டிற்கு நேற்று சென்ற போராட்டக்காரர்கள் அவரின் வீட்டு அலமாரியில் இருந்து பணக்கட்டுகளை கைப்பற்றினார்கள். கோத்தபய ராஜபக்சேவின் வீட்டு படுக்கையறையில் இருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த பணத்தை கைப்பற்றினார்கள். இதில் மொத்தம் இலங்கை மதிப்பில் ஒரு கோடியே எழுபத்து எட்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் இருந்துள்ளது. ஆனால் இதை போராட்டக்காரர்கள் அபகரிக்கவில்லை.

படுக்கையறை
மாறாக இதை அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் போராட்டக்காரர்கள் கொடுத்தனர். மூத்த காவல்துறை அதிகாரி நிசேத பெர்னாண்டோ என்ற நபரிடம் போராட்டம் செய்த மாணவர்கள் பணத்தை கொடுத்துள்ளனர். முதலில் இந்த பணத்தை வாங்க அதிகாரி நிசேத பெர்னாண்டோ மறுத்துள்ளார். பின்னர் அங்கு சாகர லியனகே உள்ளிட்ட காவல்துறை குழுவினர் வந்த பின் பணம் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டது. அதோடு இது வீடியோவாக பதிவும் செய்யப்பட்டது.

காவல்துறை
இந்த நிலையில் இந்த பணத்தை அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்கும்படி கொழும்பை சேர்ந்த சர்ச்சைக்குரிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை பதிவில் ஏற்ற வேண்டாம். புத்தகத்தில் பதியாமல், அமைச்சர் ஒருவரிடம் கொடுங்கள் என்று சர்ச்சைக்குரிய காவல்துறை உயர் அதிகாரி அழுத்தம் கொடுத்துள்ளார்.

சர்ச்சை
ஆனால் காவல் அதிகாரிகளோ.. இப்போது பணத்தை அமைச்சரிடம் கொடுத்தால் சிக்கலாகும். இதில் 1 கோடிக்கு மேல் இருக்கிறது, என்று காவல் அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதை கேட்ட அந்த சர்ச்சைக்குரிய அதிகாரி, "நான் சொன்னதைச் செய்" என்று அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது பற்றிய காவல்துறை குறிப்பு வெளியிடப்பட்டு, காவல்துறை தலைமையகத்திற்கும் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

கொடுமை
அதிபர் ஓடிவிட்ட நிலையில் அமைச்சர் ஒருவர் அவரின் வீட்டில் இருந்த பணத்தை கைப்பற்ற முயன்றதும், அதற்கு சர்ச்சைக்குரிய போலீஸ் உறுதுணையாக இருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் போராட்டங்கள் நடக்கும் நிலையில் சில அமைச்சர்கள் இப்படி பணத்தாசை பிடித்து அலைவது விமர்சனங்களை சந்தித்துள்ளது. மாணவர்கள் பணத்திற்கு ஆசைப்படாமல் அதை கொடுத்த நிலையில் போலீஸ் மட்டும் அதை அபகரிக்க நினைப்பது விமர்சனங்களை சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications