30 குழந்தைகளுடன் 317 ஈழத் தமிழர்கள் கனடா சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மூழ்குகிறதா?
கொழும்பு: இலங்கையில் இருந்து 317 ஈழத் தமிழர் தப்பி அகதிகளாக கனடாவுக்கு சென்ற கப்பல், பிலிப்பைன்ஸ் அருகே சூறாவளி காற்றால் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இலங்கையில் 2009-ம் ஆண்டுடன் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2009-ல் ஆயுதங்களை மவுனித்த பின்னர் எந்த ஒரு அரசியல், ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
இருந்தபோதும் இலங்கையில் தமிழர் பகுதியில் பல்வேறு அடக்குமுறைகள் தொடருகின்றன. இதனால் இலங்கையில் இருந்து ஈழத் தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கு தொடர்ந்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். தமிழகத்துக்கும் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பின்னணியில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட முடியவில்லை. அதில், இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே மூழ்கிக் கொண்டிருக்கிறது.அரசியல்வாதிகள் இதை கருத்தில் கொண்டு தேவைப்படும் மக்களுக்கு உதவுங்கள். தயவுசெய்து இந்த செய்தியை ஐ.நா க்கு கூடிய விரைவில் பகிரவும் என இடம்பெற்றுள்ளது. இந்த தகவலை அடிப்படையாக வைத்து சர்வதேச செய்தியாளர் Frances Harrison இதனை உறுதிப்படுத்த முடியுமா? என கேள்வி கேட்டுள்ளார்.

2010-ம் ஆண்டு அதாவது இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர், 500 ஈழத் தமிழர்கள் கனடாவுக்கு கப்பல் ஒன்றில் அகதிகளாக சென்றனர். எம்வி சன் சீ என்ற பெயரிலான அந்தக் கப்பலில் கனடா சென்றனர். அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் 76 ஈழத் தமிழர்கள் கனடாவுக்கு கப்பல் மூலம் அகதிகளாக சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக மற்றொரு ஈழத் தமிழர் கப்பல் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதேநேரத்தில் 2010-ம் ஆண்டு ஊடகங்களில் அடிபட்ட சன் சீ கப்பல் படங்களே தற்போதும் பகிரப்படுவதாக சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதனால் ஈழத் தமிழர் பயணித்த கப்பல் கடலில் மூழ்குகிறதா? என்ற செய்தி உறுதிப்படுத்த முடியாத ஒன்ராக இருக்கிறது.
(குறிப்பு: இச்செய்தியில் இணைக்கப்பட்ட படம் 2010-ம் ஆண்டு ஈழத் தமிழர்களுடன் கனடா சென்ற சன் சீ கப்பல்)
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications