இலங்கை ஜனாதிபதியும் தப்பி ஓட்டம்.. பிரதமரும் ராஜினாமா- அதிஉச்ச அரசியல் குழப்பத்துக்கு என்ன தீர்வு?
கொழும்பு: இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக உச்சகட்டமான குழப்பம் நிலவுகிறது. நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடிவிட்டார்; இடைக்கால பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகுவதாக அறிவித்துவிட்டார். இன்னொரு பக்கம் ராணுவமோ அமைதி காக்கிறது; இந்த நிலையில் இலங்கையில் அடுத்து என்னதான் நடக்கும் என்பது உலக நாடுகளின் கவனிப்பாக இருக்கிறது.
இலங்கையில் அரசு கஜானாவை சூறையாடிய ராஜபக்சே குடும்பத்தால் அந்நாட்டின் பொருளாதாரமே அழிந்து போனது; ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரம் பேரழிவு நிலைக்குப் போனது. இதனால் கொதித்து எழுந்த மக்கள், எந்த ராஜ்பக்சேக்களை தெய்வமாக கொண்டாடினார்களோ அதே ராஜபக்சேக்களை ஓட ஓட விரட்டி அடித்து வருகின்றனர். சர்வாதிகாரிகளின் சாம்ராஜ்ஜியங்கள் வீழ்ந்த சரித்திரங்கள் இப்போது நிகழ்காலத்தில் இலங்கையில் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் தற்போது ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே பதவி விலகுவதாக அறிவித்துவிட்டார்; இடைக்கால பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் பதவி விலகுவேன் என்று சொல்லிவிட்டார். இதனால் இலங்கை அரசியலில் அடுத்ததாக என்ன நடக்க வாய்ப்புகள் உள்ளன? இலங்கையின் அரசியல் சாசனப்படி அடுத்து என்ன நடக்க வேண்டும்?
- ஜனாதிபதி பதவி விலகினால் அடுத்த 3 நாட்களுக்குள் நாடாளுமன்றம் கட்டாயம் கூட்டப்பட வேண்டும்.
- நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் ராஜினாமா அறிவிப்பை நாடாளுமன்ற செயலாளர் அறிவிக்க வேண்டும்
- புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான வேட்புமனுக்களுக்கான தேதி அறிவிக்கப்படும்
- புதிய ஜனாதிபதிக்கு ஒரே ஒரு எம்.பி. வேட்புமனுத் தாக்கல் செய்தால் அவரையே தற்காலிக ஜனாதிபதியாக நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பார்; ஒன்றுக்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல் செய்தார் எம்.பி.க்களை வைத்து தேர்தல் நடத்தப்படும்.
- இலங்கையின் அரசியல் சாசனத்தின் படி தற்போதைய பிரதமரே இடைக்கால அல்லது தற்காலிக ஜனாதிபதியாவார்
- தற்போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவி விலகும் நிலையில் இயல்பாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இடைக்கால ஜனாதிபதியாவார்
- அப்போது அமைச்சர்களில் ஒருவர் தற்காலிக பிரதமராக நியமிக்கப்படுவார்
- தற்போது பிரதமர் ரணிலும் பதவி விலகுவதால் இடைக்கால ஜனாதிபதியாக சபாநாயகர் பொறுப்பேற்கிறார். இனி சபாநாயகரை மையப்படுத்தியே இலங்கை அரசியல் நடவடிக்கைகள் இருக்கும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications