கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எமது பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று சிறிசேனா கூறத் தேவையில்லை": முஸ்லீம் அமைப்பு எதிர்ப்பு

Google Oneindia Tamil News

முஸ்லிம் பெண்களை பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அகில இலங்கை ஜமையத்து உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டு உள்ளது.

தமது பெண்கள் முகத்தினை மூடாது வெளியே செல்ல வேண்டும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறத் தேவையில்லை என்றும், எவ்வாறு உடை அணிய வேண்டும் தமது பெண்களுக்கு அவர் புத்திமதி கூறத் தேவையில்லை என்றும் உலமா சபை தெரிவித்ததாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்து உள்ளது.

All Ceylon Jamiyyathul Ulama (ACJU) is opposing the ban for veils

இலங்கையில் பெண்கள் முகத்தினை மூடியவாறு ஆடை அணிவது தடை செய்யப்பட்டு உள்ளதாக அதிபர் சிறிசேனா நேற்று அறிவித்தார். இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு பிறகு நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிபர் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தார். இந்த நிலையில் மேற்படி கருத்து வெளியிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
All Ceylon Jamiyyathul Ulama (ACJU) is opposing the ban for face coverings veils in Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X