ஸ்ரீ என்ற வார்த்தை எப்போது சேர்ந்ததோ!.. அப்போதே இலங்கைக்கு அழிவுகாலம்.. அறிவியலாளர் வேதனை
கொழும்பு: சிலோன் ஸ்ரீலங்கா என பெயர் மாறியதே அந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணமானதாகவும் தமிழ்- சிங்களத்தினர் இடையே மோதல் ஆரம்பித்ததாகவும் அறிவியலாளர் அனுரா சி பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது சுற்றுலா தலங்கள் எல்லாம் முடங்கியதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் விலைவாசியும் உயர்ந்தது.

இதையடுத்து கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். ஆனாலும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை என கூறப்பட்டது. இலங்கையில் உள்ள மக்கள் கடல் வழியாக தமிழகத்திற்கு வந்தனர். குழந்தைகள் குடிக்கும் பால் கூட விண்ணை முட்டும் விலைக்கு விற்றதால் தங்களால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழல் இருப்பதாக கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு பெயர் மாற்றம்தான் காரணம் என அறிவியலாளர் அனுரா சி பெரேரா தெரிவித்துள்ளார். இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் கூறுகையில், பண்டாரநாயக்க மற்றும் விஜயகுமாரதுங்க படுகொலை முதல் ஸ்ரீ என்ற பெயரில் தொடங்கும் அரசு நிறுவனங்கள் வரை திவால் நிலையை அடைந்தமைக்கும் பெயர் மாற்றமே காரணம். உதாரணமாக ஸ்ரீலங்கா ஷிப்பிங் கம்பெனி லிமிடெட், ஸ்ரீலங்கா டிரான்ஸ்போர்ட் போர்டு, ஸ்ரீலங்கா ரயில்வே துறை ஆகியவை திவாலானது.

இலங்கையின் கடைசி மன்னனின் பெயர் கூட ஸ்ரீவிக்கிரமசிங்க ராஜசிங்க. 1956 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடங்கப்பட்டது முதல் எங்கள் நாட்டுக்கு தீமையான காலம் ஆரம்பமானது. இதை தொடங்கியது எஸ்டபிள்யூஆர்டி பண்டாரநாயக்க. ஸ்ரீ என்ற சொல்லை வாகனங்களின் எண் பலகைகளுக்கு பயன்படுத்திய பின்னரே சிங்களர்கள் - தமிழர்கள் இடையே மோதல் போக்கு ஆரம்பித்தது.
இந்த மோதலின் போது ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த கட்சியின் நிறுவனர் மத போதகர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். ஸ்ரீலங்கா என பெயரை மாற்றுவதற்கு முன்பு இந்த நாடு லங்கா, சிங்களே, தம்பாபண்ணி, சேரான்திப், தப்ரோபனே, சேலான், சிலோன், ஹெலாடிவா, தஹாம் திவைனை அல்லது லக்பிமா என ஸ்ரீ என்ற வார்த்தையே பயன்படுத்தாமல் இருந்தது. இவ்வாறு அறிவியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications