கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈஸ்டர் தாக்குதல்கள்- இந்தியாவில் இருந்தே சதி: இலங்கை ராணுவ தளபதி பகீர் தகவல்

Google Oneindia Tamil News

கொழும்பு: ஈஸ்டர் தாக்குதல்களுக்கு இந்தியாவில் இருந்தே சதித் திட்டம் தீட்டப்பட்டது என இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட மனித வெடிகுண்டுகள் இந்திய நகரங்களுக்கும் பயணம் செய்திருந்ததாக இலங்கை ராணுவம் தெரிவித்திருந்த்து. ஆனால் இந்தியா இதை திட்டவட்டமாக மறுத்தது.

Easter Attacks plot from India,says SL Army chief

இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில்தான் மனிதவெடிகுண்டுகள் பயிற்சி எடுத்தனர் என மீண்டும் ஒரு குற்றச்சாட்டை இலங்கை முன்வைத்தது. இதற்கும் இந்திய தரப்பில் மறுப்பு கூறப்பட்டது.

பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலங்கை பொறுப்பாளர் சஹ்ரான் கடல்வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று சதி ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் இலங்கை தரப்பு கூறியது. இந்நிலையில் கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தளபதி மகேஷ் சேனநாயக, ஈஸ்டர் தாக்குதல்களில் பெரும்பகுதி இந்தியாவில் இருந்துதான் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

டெபாசிட் வாங்குறதுக்கு போய் பணப்பட்டுவாடா.. அமமுகவை கிண்டல் செய்யும் செல்லூரார் டெபாசிட் வாங்குறதுக்கு போய் பணப்பட்டுவாடா.. அமமுகவை கிண்டல் செய்யும் செல்லூரார்

சஹ்ரானின் தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு மீது சில ஆண்டுகளாக பாதுகாப்புத் துறைக்கு சந்தேகம் இருந்து வந்தது. இஸ்லாமிய இறுக்கமான கொள்கைகளைக் கொண்ட ஒரு அமைப்பாகத்தான் அதை அனைவரும் பார்த்தோம். ஆகையால் பாதுகாப்புத் துறை தொடர்பான அனைவருமே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

English summary
Sri Lanka's army commander Mahesh Senanayake said that the Easter day attacks plot from India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X