இலங்கை உச்சநீதிமன்ற கட்டிடத்தில் பயங்கர தீ- போராடி அணைத்தனர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் உச்சநீதிமன்ற கட்டிடத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த இந்த தீ போராடி அணைக்கப்பட்டது.
கொழும்பு புதுக்கடையில் இலங்கை உச்சநீதிமன்றம் அமைந்துள்ளது. இன்று மாலை திடீரென உச்சநீதிமன்ற கட்டிடத்தில் தீ பிடித்தது. பல அடி உயரத்துக்கு கரும்புகையுடன் தீ மளமளவென பற்றியது.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 9 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.
இதனிடையே இந்த தீவிபத்தில் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் எதுவும் எரிந்து நாசமாகவில்லை என விளக்கம் தரப்பட்டுள்ளது. இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications