இலங்கை தாக்குதலில் 4 சீனா விஞ்ஞானிகள் பலி- ஐ.எஸ். இயக்கத்தின் பின்னணியில் சர்வதேச நாடுகள்?
கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் நாளில் மனிதவெடிகுண்டுகள் நடத்திய தாக்குதல்களில் 4 சீனா விஞ்ஞானிகளும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தாக்குதலை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பின்னணியில் சர்வதேச நாடுகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்கிற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இலங்கையில் மனிதவெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியதாக ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றிருக்கிறது. இருப்பினும் ஐ.எஸ். இயக்கத்தின் பின்னணியில் சர்வதேச நாடுகளுக்கும் தொடர்பிருக்கலாம் என கூறப்பட்டு வந்தது.

இலங்கையின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவே பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்கிற பெயரில் சில நாடுகள் உள்ளே நுழைந்திருக்கின்றன என சிங்கள அரசியல்வாதிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஈஸ்டர் தாக்குதல்களில் 4 சீனா விஞ்ஞானிகளும் பலியாகி இருப்பதை கொழும்பில் உள்ள அந்நாட்டு தூதரகம் உறுதி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியப் பெருங்கடலின் இயற்கை வளம் குறித்த ஆய்வில் இந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பாக கிங்ஸ்பரி ஹோட்டலில் கருத்தரங்கம் ஒன்றும் நடைபெற இருந்தது.
இக்கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 18, 19 அன்ரு லி ஜியான் (வயது 38), பான் வென் லியாங் (வயது 35) ஆகியோர் தலைமையில் சீனா விஞ்ஞானிகள் குழு வருகை தந்துள்ளது. இக்குழுவினர் கிங்ஸ்பரி ஹோட்டலில் தங்கி இருந்த போது ஏப்ரல் 21-ந் தேதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
தற்கொலைப் படைத் தாக்குதலில் 2 சீனா விஞ்ஞானிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 விஞ்ஞானிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விஞ்ஞானிகள் படுகொலைக்கு சீனா தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஐ.எஸ். இயக்கத்துக்கும் வெளிநாடுகளுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. தற்போது சீனா விஞ்ஞானிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும் அப்பால் சர்வதேச நாடுகளின் சதியும் பின்னணியில் இருக்கலாம் என்கிற சந்தேகம் வலுவடைகின்றது என்கின்றனர் இலங்கை ஆய்வாளர்கள்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications