2011ல் பிரபாகரன் வீட்டை தரைமட்டமாக்கினர்... வினை விதைத்த, ராஜபக்சேவின் பூர்வீக வீடு இப்போது தீக்கிரை
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதை இப்போது உலகமே கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறது. அன்று எல்டிடிஇ தலைவர் பிரபாகரனின் வீட்டினை தரைமட்டமாக்கியவர்களின் வீடு தீக்கிரையாகியுள்ளது.
கொழும்பு: ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை ஒன்று உள்ளது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நியூட்டனின் மூன்றாவது விதி. அன்று தமிழ் மக்களுக்கு எதிராகவும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் கொடூர கரங்களை நீட்டி வினையாற்றிய ராஜபக்சே இன்று அதற்கான எதிர்வினையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். 2011ஆம் ஆண்டு எல்டிடிஇ தலைவர் பிரபாகரனின் வீட்டினை தரைமட்டமாக்கிய ராஜபக்சேவின் வீடு இன்று தீக்கிரையாகியுள்ளது.
Recommended Video
வால்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று இரவோடு இரவாகப் இலங்கை படையினர் முற்றாக இடித்து அழித்தனர். ஒரு செங்கல் கூட பிரபாகரன் வாழ்ந்த வரலாற்றை நினைவூட்டக்கூடாது என்று சிதைத்து அழித்தார் மஹிந்த ராஜபக்சே, பிரபாகரனின் வீட்டுக்கு இரண்டு டிப்பர்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் சகிதம் வந்த படையினர் நள்ளிரவு வரை இடிபாடுகளை அகற்றினர்.
வன்னி யுத்தத்திற்கு பிறகு படிப்படியாக வால்வெட்டித்துறையில் இருந்த பிரபாகரனின் வீட்டினை படிப்படியாக சிங்களவர்கள் சிதைத்த நிலையில் 2009ஆம் ஆண்டு பிரபாகரனின் மறைவுக்குப் பிறகு அவர் வாழ்ந்த வீட்டினை முற்றிலுமாக சிதைத்தனர். இதற்குக் காரணம் தமிழகத்தில் இருந்து சென்ற சுற்றுலா பயணிகள் வால்வெட்டித்துறைக்கு சென்று பிரபாகரனின் வீட்டை பார்க்க ஆர்வம் காட்டினர். இதனையடுத்தே ஒரு செங்கல் கூட பிரபாகரனின் பெயரை சொல்லக்கூடாது என்று சிதைத்து அழித்தனர். வடக்கிலும் கிழக்கிலும் புலிகள் இயக்கப் போராளிகளான மாவீரர்களின் நினைவிடங்களையும் நினைவுஸ்தூபிகளையும் கட்டம் கட்டமாக அழித்து தரைமட்டமாக்கினர். முல்லைத்தீவில் பிரபாகரன் பயன்படுத்தினார் என்று கூறப்படும் பங்கரை சிங்களச் சுற்றுலாப் பயணிகளுக்கான மையமாக இராணுவம் மாற்றியது.

வினை விதைத்த ராஜபக்சே
தமிழக மக்களுக்கு எதிராக வினை விதைத்த மஹிந்த ராஜபக்சே அந்த வினைப்பயனை அறுவடை செய்து கொண்டிருக்கிறார். இலங்கை கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த ஒரு மாதமாக அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த அமைதிப் போராட்டத்தை ஒடுக்க பதவி விலகும் முன்பாக மகிந்த ராஜபக்சே வன்முறை குண்டர்களை களமிறக்கினார். ஆனால் இந்த குண்டர்களை பொதுமக்கள் திருப்பி அடித்து துரத்தி அடித்தனர்.அத்துடன் கொழும்பு காலிமுகத்திடல் வன்முறை இலங்கையில் சிங்களரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரத்தம் சொட்டச் சொட்ட தாக்குதல்
பதவி விலகிய முன்னாள் பிரதமர் ராஜபக்சே ஆதரவு அரசியல்வாதிகளை சிங்களர்களே தேடி தேடி தாக்குகின்றனர். ராஜபக்சே ஆதரவாளர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் இராஜாங்க அமைச்சரான சாந்த பண்டாரவின் வீட்டுக்கு பொதுமக்கள் தீ வைத்து உள்ளனர். பொதுஜன பெரமுனவின் எம்.பி.யும் மகிந்தவின் தீவிர ஆதரவாளருமான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு குருநாகலில் தாக்குதலுக்குள்ளானது. முன்னாள் அமைச்சர் நிமல் லான்சாவின் நீர்கொழும்பில் உள்ள வீடு தாக்கப்பட்டு பலத்த சேதப்படுத்தப்பட்டு உள்ளது. முன்னாள் அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத்தின் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. நிட்டம்புவ, கடவத்தை மற்றும் மினுவாங்கோவில் பேரூந்துகள் மற்றும் சொகுசு கார்கள் பலத்த சேதம் அடைந்து உள்ளன.புலத்சிங்கள பிரதேச சபை தவிசாளரும் மொறட்டுவ நகர சபை மேயருமான சமன்லாலின் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது.

நாட்டை விட்டு ஓடுங்கள்
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் உல்லாசப் பயணத்துறையின் முன்னாள் அமைச்சரான பிரசன்ன ரணதுங்கவின் வீட்டுக்கும் ஒரு குழுவினர் தீ வைத்து எரித்தனர். பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே அலரி மாளிகையில் இருந்து அலரியடித்துக்கொண்டு ஓடிவிட்டார். மஹிந்த ராஜபக்சே பதவி விலகியதை பலரும் விடுதலை பெற்று விட்டதாக கூறி வருகின்றனர். கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

எரிக்கப்பட்ட தலைவர்களின் வீடுகள்
ராஜபக்சே வீடு மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களான சனத் நிஷாந்தவின் வீடு, திஸ்ஸ குட்டியாராச்சியின் வீடு,குருநாகல் மேயர் இல்லம், ஜோன்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்,மொரட்டுவை மேயர் இல்லம்,அனுஷ பாஸ்குவல் ( எம்.பி ) வீடு, பிரசன்ன ரணதுங்க வீடு, ரமேஷ் பத்திரண வீடு, சாந்த பண்டார வீடு, ராஜபக்ச பெற்றோரின் கல்லறை,நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல், அருந்திகவின் வீடு, கனக ஹேரத் - மஹிபால ஹேரத் வீடுகள்
காமினி லொக்குகேவின் வீடு, நிமல் லான்சாவின் 2 வீடுகள், வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு, பந்துல குணவர்தன வீடு, வீரகெட்டிய மெதமுலன வீடு,கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம், கம்பஹா நாலக கொடஹேவா இல்லம்,விமல் வீரவன்சவின் வீடு,அசோசியேட் சூப்பர் சென்டர், சிறிபாலகம்லத் வீடு, கெஹலிய ரபுக்வெல்ல வீடு, ரோஹித அபேகுணவர்தன இல்லம், நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல்,காஞ்சனா விஜேசேகர இல்லம், துமிந்த திசாநாயக்க வீடு, அலி சப்ரி ரஹீம் வீடு (புத்தளம்),எஸ்.எம் . சந்திரசேன வீடு, சன்னஜயசுமண வீடு தவிர உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பலரின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.

விடுதலை... விடுதலை
"அச்சமின்றி எழுந்து நின்றால்
அன்று முதல் விடுதலை...
துச்சமாக எண்ணுவோர்கள் துவைக்கிறார்கள் மக்களை..
குட்டுப்பட்டு குட்டுபட்டு
குனிந்து நிற்கும் பாடலை
எட்டுத்திக்கும் வெட்டித்தூக்க
எழுது பாரு பேரலை
துயர் ஏற்றுவோர்களை ஏமாற்றுவோர்களை
கொன்று தின்று ஆடும்பாரு
இராவணன் தலை
நம்பி நாங்கள் வாக்களித்த
அத்தனையும் தறுதலை..-வா
ஒன்று சேர்ந்து தேர்ந்தெடுப்போம்
தகுதியான ஒரு தலை.
நாணுதல் களை
நடுங்குதல் பிழை
ஆண்ட மண்ணை
ஆளவேண்டும் ஆதியின் தலை
விடுதலை.. விடுதலை..விடுதலை
விரட்டுவோம் விரட்டுவோம் நரகலை..
விடுதலை விடுதலை விடுதலை
ஓடட்டும் ஒழியட்டும் தறுதலை..."
என்று ராஜபக்சே குடும்பத்திற்கு எதிரான குமுறலை கவிதையாக எழுதியுள்ளார் பாடலாசிரியர் அஸ்மின்.
2009ஆம் ஆண்டு கொத்து குண்டுகள் வீசி கொத்து கொத்தாக கொலை செய்தனர். தமிழக இனத்தை அழித்த ராஜபக்சே குடும்பத்தினரே இப்போது நாட்டை விட்டு உயிரைக்காப்பாற்றிக்கொள்ள தப்பியோட தயாராகி வருகின்றனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications