அப்பா ரொம்ப சேஃப்.. வெளிநாடு தப்பியோட மாட்டோம்.. மகிந்த மகன் நமல் ராஜபக்சே தடாலடி!
கொழும்பு : என் தந்தை பாதுகாப்பாகவும் குடும்பத்துடன் தொடர்பிலும் உள்ளார், நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் எங்கள் குடும்பத்துக்கு இல்லை என இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், மக்கள் மீது மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் பதில் தாக்குதல் கலவரமாக மாறியது.
இலங்கை ஆட்சியாளர்கள், எம்பிக்கள், மகிந்தவின் உறவினர்களுக்கு சொந்தமான சொத்துகள், வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதோடு, அவை சொந்த நாட்டு மக்களாலேயே தீக்கிரையாகும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

மகிந்த ராஜபக்ச
இந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, இன்று காலை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியது. நேற்று காலையிலேயே மகிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நிலையில் மகிந்தவின் குடும்பமும் தப்ப இருப்பதாக தகவல் வெளியாகியது.

நமல் ராஜபக்ச பேட்டி
இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பிச் செல்லமாட்டார் என அவரது மகன் நமல் ராஜபக்ச AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், மகிந்தவும் அவரது குடும்பத்தினரும் பலத்த இராணுவ பாதுகாப்பிற்கு மத்தியில் திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

திருகோணமலை கடற்படைத் தளம்
இதனையடுத்து ஆயிரக்கணக்கான இலங்கை மக்கள் திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தான் ராஜபக்சவின் மகனும், இலங்கை முன்னாள் அமைச்சருமான நமல் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில் "நாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் உள்ளன, நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்," என்றும், "தனது குடும்பத்தின் மீது மக்களின் கோபம் மிக மோசமானது " என்று கூறினார்.

வெளிநாடு செல்லும் திட்டமில்லை
என் தந்தை பாதுகாப்பாகவும், குடும்பத்துடன் தொடர்பிலும் உள்ளார்; நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் எங்கள் குடும்பத்துக்கு இல்லை. எப்போதும் எங்கள் மக்களுடனே நிற்கிறோம்" என்று மேலும் நமல் கூறினார். முன்னதாக பாதுகாப்புப் படையினர் பிரதமரின் இல்லத்திற்குள் இருந்து ராஜபக்சவை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது. கனரக ஆயுதங்கள் ஏந்திய இலங்கை ராணுவம் எப்படியோ மகிந்த ராஜபக்சவை அவரது வீட்டில் இருந்து வெளியேற்றிய நிலையில், நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள கடற்படைத் தளமான திருகோணமலைக்கு ஹெலிகாப்டர் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
Recommended Video

5 பேர் பலி
மறுபுறம் போராட்டக்காரர்கள் தலைநகர் கொழும்பில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்படைத் தளத்தையும் அடைந்துள்ளனர். இலங்கையின் ராஜபக்சே அரசு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும், போலீசாரையும் குவித்துள்ளதோடு, ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் பதவி விலகலை அடுத்து ஏற்பட்ட வன்முறையில் 200 பேர் காயமடைந்துள்ளதுடன் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவரும் அடங்குவார். இந்நிலையில், இலங்கை மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications