இலங்கையை உலுக்கிய மனித குண்டுகள்.. பகீர் தகவல்கள்.. அரசியல் தலைவர்களுக்குத் தொடர்பு?
Recommended Video
கொழும்பு: இலங்கையில் 359 பேரை பலி கொண்ட மனித வெடிகுண்டு நபர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு பயன்படுத்தும் வெடிகுண்டு ஜாக்கெட்டுகள் போன்றவைதான் இலங்கையிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருந்த கால கட்டத்தில் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலும் இலங்கை ராணுவம், அரசு நிர்வாகத்தை இலக்கு வைத்தே புலிகள் தாக்கி உள்ளனர்.

மனித வெடிகுண்டுகள்
தற்போது விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாத நிலையில் மிகப் பெரும் பேரழிவு தாக்குதலை இலங்கை எதிர்கொண்டிருக்கிறது. தேவாலயங்கள், ஹோட்டல்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களை வைத்து இக்கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 359 பேர் இத்தாக்குதல்களில் பலியாகி உள்ளனர். மனித வெடிகுண்டுகள் மூலமே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அரசியல் தொடர்பு உள்ளதா
இலங்கையில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தில்தான் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா? என்கிற சந்தேகத்துக்கு விடை கிடைத்ததாக இல்லை. இத்தாக்குதல் நடைபெற்ற உடனேயே, மீண்டும் ராஜபக்சே அரசாங்கம் அமைய வேன்டும் என பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி ஒரு ட்விட்டர் பதிவை போட்டிருந்தார். இதனால்தான் அரசியல் ஆதாயத்துக்காக அப்பாவிகள் பலி எடுக்கப்பாட்டார்களா? என்கிற கேள்வி எழுகிறது.

உள்நாட்டிலேயே தயாரானவை
இதனிடையே இலங்கை எம்.பி.க்கள் இருவருக்கு இத்தாக்குதல்களில் தொடர்பிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக நாம் விசாரித்த போது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஜாக்கெட்டுகள் மூலமே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அதிக எடை
வழக்கமாக புலிகளின் வெடிகுண்டு ஜாக்கெட்டுகள் எடை குறைந்தவை. ஆனால் தற்போதைய தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பவை அதிக எடை கொன்ட ஜாக்கெட்டுகள். அரசியல்வாதிகள் தொடர்பு இல்லாமல் இத்தகைய ஜாக்கெட்டுகளை தயாரிக்கவே முடியாது.

இன்னொரு சிரியாவாக மாறும்
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் குழு அல்லது தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய தலைவர்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இந்த உண்மையை கண்டுபிடித்தால்தான் இலங்கை எதிர்கொண்டிருக்கும் அபாயம் நீங்கும். இல்லை எனில் இத்தகைய தாக்குதல்கள் நீடித்து கொண்டே இருக்கும். இலங்கை இன்னொரு சிரியாவாக மாறிவிடும் என எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications