இலங்கை நாடாளுமன்றத்தில் ஒற்றை எம்.பி. ரணில் விக்கிரமசிங்கே- நேற்று பிரதமர்- இன்று ஜனாதிபதி!
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து நியமன எம்.பி.யான ரணில் விக்கிரமசிங்கேதான் இன்று நாடாளுமன்ற எம்.பி.க்கள் வாக்கெடுப்பின் மூலம் இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக தேர்வாகி உள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகும் முன்னதாக தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை நியமித்தார்.

இதனையடுத்து இலங்கை அரசியல் சாசனப்படி, இடைக்கால ஜனாதிபதியை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கின. இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களால் இடைக்கால ஜனாதிபதி தேர்வு நடைபெறும். இதன்படி இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு நடந்தது. இத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, டலஸ் அழகப்பெரும, அனுர குமார திசநாயக்க போட்டியிட்டனர். இதில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்று இடைக்கால ஜனாதிபதியாகி உள்ளார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ரணில் விக்கிரமசிங்கே தொடர்பானவை ஆச்சரியம் தரக்கூடியவைதான். 1977-ம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்த்தனவால் அரசியலில் நுழைந்தார் ரணில். தமது 28 வயதிலேயே இலங்கையின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதவியை பெற்றவர் ரணில்.
1993-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாச படுகொலை செய்யப்பட்டர். அதனால் இலங்கை அரசியல் சாசனப்படி பிரதமராக இருந்த விஜேதுங்கே, இடைக்கால ஜனாதிபதியானார். அப்போது போட்டி எதுவும் இல்லை என்பதால் ஒருமனதாக நாடாளுமன்ற எம்.பி.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜேதுங்கே. மேலும் விஜேதுங்கேவுக்கு பதில் பிரதமரானவர் ரணில் விக்கிரமசிங்கே. இப்பதவியில் ஓராண்டுதான் நீடித்தார் ரணில்.
பின்னர் 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக இலங்கை பிரதமரானார் ரணில். ஆனால் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்ததால் 2004-ல் மீண்டும் பிரதமர் பதவியை பறிகொடுத்தார் ரணில். 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2015-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வென்ற ரணில் பிரதமரானார். அப்போதும் சில மாதங்கள்தான் ரணில் பிரதமராக இருந்தார். இப்படி இலங்கையின் அரசியல் வரலாற்றில் 6 முறை பிரதமராக இருந்தவர்தான் ரணில் விக்கிரமசிங்கே.
1999, 2005-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டார் ரணில். இந்த 2 ஜனாதிபதி தேர்தல்களிலும் சந்திரிகா மற்றும் மகிந்த ராஜபக்சேக்களிடம் தோல்வியைத் தழுவினார் ரணில்.
இந்நிலையில் 2020-ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது என்றே கூறப்பட்டது. மேலும் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்குகள் அடிப்படையில் ஒரே ஒரு நியமன எம்.பி. பதவி கிடைத்தது. அதனையும் ரணில் விக்கிரமசிங்கே எடுத்துக் கொண்டார். அதாவது இலங்கை நாடாளுமன்றத்தில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு நியமன எம்.பி.தான்.. அந்த நியமன எம்.பியும் ரணில் விக்கிரமசிங்கேதான்.
இந்த பின்னணியில் இலங்கையில் பொருளாதார பேரழிவை சீரமைக்க கோரி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச, பிரதமராகும் நிலை இருந்தது. ஆனால் சஜித் மறுத்ததால் ஒரே ஒரு நியமன எம்.பி.யான ரணில் தற்காலிக பிரதமரானார்.
அதன்பின்னரும் மக்கள் போராட்டம் தீவிரமடைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவும் ராஜினாமா செய்தார். அவர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் தற்காலிக பிரதமர் ரணிலையே தற்காலிக ஜனாதிபதியாக்கினார். இலங்கையில் ஜனாதிபதி பதவி காலியான நிலையில் அந்நாட்டு அரசியல் சாசனப்படி நாடாளுமன்ற எம்.பி.க்களால் 2024-ம் ஆண்டு வரைக்கான இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே இன்று
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதாவது ஒரே ஒரு நியமன எம்.பி. பதவி மூலம் நேற்று பிரதமராக இன்று இடைக்கால ஜனாதிபதியாக அரியாசனம் ஏறி புது சரித்திரம் படைத்துள்ளார் ரணில்!
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications