அலரி மாளிகையில் பணிகளை ஆரம்பித்தார் ரணில் விக்ரமசிங்க...இலங்கைக்கான இந்திய தூதருடன் ஆலோசனை
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அலரிமாளிகையில் தனது பணிகளைத் தொடங்கியுள்ளார். இலங்கைக்கான இந்திய தூதர் ஆலோசனை மேற்கொண்டார்.
கொழும்பு: இலங்கையின் 25வது பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் தனது பணிகளைத் தொடங்கினார். இன்றைய தினம் அவருடன் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே ஆலோசனை மேற்கொண்டார்.
இலங்கை மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அலரி மாளிகையை காலி செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவானார்.

நாட்டில் நெருக்கடி நிலை நீடிக்கிறது... மக்களின் போராட்டம் ஓயவில்லை என்றாலும் கோத்தபாய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமல் நீடிக்கிறார். அவர் ராஜினாமா செய்யாமல் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர்.
இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் இலங்கையின் பிரதமராக மிக இக்கட்டான சூழலில் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருக்கிறார். நேற்றைய தினம் அந்த நாட்டின் புதிய பிரதமராக 6 வது முறையாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.
பதவியேற்ற கையோடு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். எங்களிடம் பொருளாதார செயல் திட்டம் இருக்கிறது. நான் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவேன். எங்கள் அரசாங்கத்தின் கீழ் இலங்கை-இந்தியா இடையிலான உறவு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்தியா- இலங்கை உடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும்'' என்றார்.
இந்த நிலையில் சற்று முன்னர் அலரி மாளிகையில் தனது பணிகளைத் தொடங்கினார் ரணில் விக்ரமசிங்க.
இலங்கைக்கான இந்திய தூதருடன் கோபால் பாக்லே உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன்பின்னர், நாட்டின் தற்போதய நிலைமை மற்றும் எதிர்காலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார்.
Recommended Video
இதனிடையே இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு கிடைக்காது என்று அக்கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications