Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிதி அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க.. “நிலைமை மாறணும்னா நானே மந்திரி ஆகணும்”

Subscribe to Oneindia Tamil

கொழும்பு : இலங்கையின் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்க பலரும் தயங்கிய நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இன்று நிதி அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்கள் வெடித்தது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகியதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பிரதமராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார நிலையை மீட்டெடுக்க வேண்டுமானால், நிதியமைச்சராகவும் தானே இருக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறி வந்த நிலையில் இன்று நிதி அமைச்சக பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

பிரதமரான ரணில்

பிரதமரான ரணில்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனையடுத்து பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்தன. போராட்டங்களில் கடும் வன்முறைகளும் வெடித்த நிலையில் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.

மோசமான சூழலில்

மோசமான சூழலில்

மிகமோசமான காலகட்டத்தில் இலங்கையில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றிருப்பதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்பு பல்வேறு அமைச்சர்கள் பதவி ஏற்றாலும் நிதித்துறைக்கான பொறுப்பு யாருக்கும் வழங்கப்படவில்லை. நாடு இருக்கும் சூழலில், நிதியமைச்சர் பொறுப்பை ஏற்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

 எனக்கே வழங்க வேண்டும்

எனக்கே வழங்க வேண்டும்

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவே நிதித்துறையையும் கூடுதலாக கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது கட்சிக்கே நிதியமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமெனக் கோரிய நிலையில், நாட்டின் பொருளாதார நிலையை மீட்டெடுக்க வேண்டுமானால், நிதியமைச்சர் பதவியை தனக்கே வழங்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. நிதி

Recommended Video

    Russiaவின் Food Weapon! Mahindra Scorpio-N Launch எப்போ | #BitsandBytes #Auto #Tech
    நிதி அமைச்சர்

    நிதி அமைச்சர்

    இதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க இன்று நிதியமைச்சராகப் பதவி ஏற்றார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்காக பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். வரலாறு காணாத பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய பட்ஜெட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் தாக்கல் செய்வார் எனக் கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+