நாடாளுமன்றத்தை முடக்கியது.. பிரதமரின் செயலாளர் நீக்கம்.. சிறிசேனா அதிரடியின் பின்னணி என்ன?
கொழும்பு: நாடாளுமன்றத்தை திடீரென முடக்கியது, பிரதமரின் செயலாளர் நீக்கப்பட்டது ஆகியவற்றை பிறப்பித்த சிறிசேனாவின் உத்தரவின் சிறிசேனா- ராஜபக்ஷே கூட்டணிக்கு பலம் இல்லாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அது போல் ஆதரவை திரட்ட ராஜபட்சவுக்கு கால அவகாசத்தை மறைமுகமாக கொடுப்பதாகவே பார்க்கப்படுகிறது.
இலங்கையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால் உலகத் தமிழர்கள் உறைந்து போயுள்ளனர்.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷே இலங்கையின் பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ளதுதான் தற்போதைய கவலையாக உள்ளது.

ரணில் கட்சி கூட்டணி
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிதான் இலங்கை நாடாளுமன்றத்தில் தனி பெரும் கட்சியாகும். பெரும்பான்மை பலம் இல்லாததால் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது ரணில் கட்சி.

பெரும்பான்மையை நிரூபிக்க
இந்த நிலையில் பெரும்பான்மையே இல்லாத சிறிசேனா ரணிலை நீக்கிவிட்டு ராஜபக்ஷேவை பிரதமர் பதவியில் அமர்த்தியிருப்பது அரசியலமைப்புக்கு எதிரான செயலாகவே பார்க்கப்படுகிறது. மேலும் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ரணில் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி ராஜபட்ச உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ரணில் கோரிக்கை வைத்தார்.

பிரதமரின் செயலாளர் நீக்கம்
இதையடுத்து இன்று அவசர அவசரமாக இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ஆம் தேதி வரை தற்காலிகமாக மூட சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். அதுபோல் பிரதமரின் செயலாளராக இருந்த சமான் ஏகநாயகேவை நீக்க உத்தரவிட்டார்.

சிறிசேனாவின் உத்தரவின் பின்புலம் என்ன
நாடாளுமன்றத்தை முடக்கியது, பிரதமரின் செயலாளரை நீக்கியது என அடுத்தடுத்து சிறிசேனா செய்து வருவதை பார்த்தால் ராஜபக்ஷே- சிறிசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவுக்கு கால அவகாசத்தை மறைமுகமாக வழங்கியுள்ளார் சிறிசேனா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications