"கச்சத்தீவு விவகாரம்.." உள்ளே வரும் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்.. பரபர பேச்சு.. என்ன சொன்னார்
கொழும்பு: கச்சத்தீவு விவகாரம் இப்போது மீண்டும் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சில பரபர விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
காலங்காலமாக இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு 1974ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மீண்டும் இந்த கச்சத்தீவு விவகாரம் பேசுபொருள் ஆகி இருக்கிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களைப் பகிர்ந்து இருந்தார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியும் கூட நேரடியாக எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து இருந்தார்.
கச்சத்தீவு விவகாரம்: இதற்கிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். காங்கிரஸ் செயல்பாடுகளாலேயே கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டதாக அவர் சாடினார். மேலும், இது அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் இது குறித்து மாநில அரசுக்குத் தேவையான தகவல்கள் பகிரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ்- திமுகவைக் கடுமையாகச் சாடினார். மத்திய அரசு கச்சத்தீவை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே இந்த கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார்.
ஜீவன் தொண்டமான்: கச்சத்தீவு விவகாரம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இந்தியா அனுப்பவில்லை என்று ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மேலும், கச்சத்தீவை மீண்டும் ஒப்படைப்பது குறித்து இந்தியாவிடம் இருந்து எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்று தெரிவித்த அவர், ஒருவேளை கச்சத்தீவு குறித்து கோரிக்கை வந்தால், அதற்கு இலங்கை வெளியுறவுத் துறை பதில் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இலங்கையைக் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என்றும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அமைச்சர் ஜெய்சங்கர்: முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், "முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங் 1974ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விகாரம் குறித்து விளக்கம் அளித்து இருந்தார். அதை இங்கே நான் பகிர விரும்புகிறேன். 1974இல் ஒப்பந்தம் முதலில் கையெழுத்தான போது புனித யாத்திரை, மீன்பிடி உரிமைகள் ஆகியவை எதிர்காலத்திற்காக முழுமையாகப் பாதுகாக்கப்பட்டும் என்றே கூறியிருந்தார்.
அதேநேரம் 2 ஆண்டுகளில் 1976இல் இரு தரப்பிற்கும் இடையே மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இரு நாடுகளாலும் தங்களுக்கான பிரத்தியேக பொருளாதார மண்டலங்களை நிறுவலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய மீனவர்கள் இதுவரை மீன்பிடித்து வந்த பாரம்பரிய பகுதிகள், கடல் பகுதி மற்றும் இலங்கையின் பிரத்தியேக மண்டலத்தில் நுழையக்கூடாது என்றே அந்த ஒப்பந்தத்தில் இருந்ததது.
அதாவது மீன்பிடிக்கும் உரிமையை 1976இல் வாபஸ் பெற்றுள்ளனர். அப்போது இருந்த காங்கிரஸ் அரசின் அலட்சியமான போக்கே இதற்குக் காரணம். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசுக்குத் தெரியாது என்று சொல்வதை ஏற்க முடியாது. மத்திய அரசு இது குறித்து தகவல்களைத் தமிழக அரசிடம் பகிர்ந்தே வந்தது ஆவணங்களில் தெரிய வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications