2 இலங்கை கப்பல்களில்.. 3 டிராலி பேக்குகளில் தப்பி ஓட்டம்? கட்டுகட்டாக பணத்துடன் கோத்தபயா எஸ்கேப்பா?
கொழும்பு: இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்களில் 3 டிராலி பைகளுடன் தப்பியவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி போராட்டத்தையும் தொடங்கினர்.

இதையடுத்து அமைச்சராக இருந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜினாமா செய்தார். பின்னர் அவரது அமைச்சரவையில் ஒவ்வொருவராக ராஜினாமா செய்த போதிலும் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ய மாட்டேன் என்றார்.
இதையடுத்து கடந்த மே மாதம் 9ஆம் தேதி பிரதமர் ராஜபக்சவின் அலரி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து ராஜபக்ச அந்த இடத்தை விட்டு புறமுதுகிட்டு தப்பி ஓடினார், தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து ராஜபக்சவின் வீடு தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
பின்னர் பிரதமராக ரணில் பொறுப்பேற்றார். அவரது தலைமையிலும் பொருளாதாரத்தை சீர் தூக்கி நிறுத்த முடியவில்லை. இதையடுத்து அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில் ஆகியோர் பதவிகளிலிருந்து விலக வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கோத்தபய மறுத்துவிட்டார்.
இதையடுத்து அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். உடனே கோத்தபய அதிபர் மாளிகையை விட்டு தப்பிஓடிவிட்டார். இதையடுத்து அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். கோத்தபயவை எங்கிருக்கிறார் என அவர்கள் தேடினர். ஆயினும் அவர் கிடைக்கவில்லை.
கொழும்பு துறைமுகத்தில் நாகூரமிட்டிருந்த இரண்டு கப்பல்கள் அங்கிருந்து அவசரமாக ஒரு சிலருடன் புறப்பட்டு சென்றுள்ளன#lka #SriLanka pic.twitter.com/3oJbKEFtdY
— Vithushan Jeyachandran (@imjvithu) July 9, 2022
இந்த நிலையில் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்களில் சில முக்கிய நபர்கள் தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த 2 கப்பல்களில் சிலர் 3 டிராலி பைக்குகளுடன் அவசர அவசரமாக வெளியேறும் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்த கப்பல்களின் பெயர் எஸ்எல்என்எஸ் சிந்தூர்ல மற்றும் எஸ்எல்என்எஸ் கஜபாஹு ஆகியவை ஆகும். இந்த கப்பல்களில் யார் யார் சென்றார்கள் என்ற விவரங்களை தெரிவிக்க கடற்படை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அவர்கள் கோத்தபய ராஜபக்ச மற்றும் குடும்பத்தினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications