கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை.. அரசு அவசர ஆலோசனை

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

    கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, நாளையும், நாளை மறுதினமும் அந்த நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் பல்வேறு பகுதிகளில் 3 தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

    Sri lanka blast: Government declared holiday for schools and colleges

     குண்டு வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது... நடவடிக்கை எடுக்காதது ஏன்?... அதிர்ச்சி தகவல் குண்டு வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது... நடவடிக்கை எடுக்காதது ஏன்?... அதிர்ச்சி தகவல்

    இந்த குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 200-ஐ நெருங்கிக் கொண்டுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போருக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

    நாடு முழுக்க பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், நாளை மற்றும் நாளை மறுதினம் இரு நாட்களும், அங்குள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் அகில விவராஜ் காரியவசம் தெரிவித்தார்.

    இதனிடையே அதிபர் சிறிசேனா தலைமையில் அரசின் உயர்மட்டக் குழு கூட்டம் கொழும்பில் நடைபெற்று வருகிறது. குண்டு வெடிப்பின் பின்னணி பற்றி அதில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    Srilanka government declared holiday for schools and college on Monday and Tuesday as bomb blasts rocked the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X