முள்ளிவாய்க்காலில் செய்த கொடூரத்தை விடவா..? அந்த சாபம்தான் இது! இலங்கை எம்.பி. சிறிதரன் உருக்கம்
கொழும்பு: ஈழப்போரின்போது முள்ளிவாய்க்காலில் கஞ்சிக்காக வரிசையில் நின்ற தமிழ் குழந்தைகள் மீது குண்டுகளை வீசிக்கொன்ற ராஜக்சே அரசு இன்று அதற்கான வினையை அனுபவித்து வருகிறது என இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன் கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலை உயர்வால் அந்நாட்டில் மக்கள் வாழ வழியின்றி இந்தியாவுக்குள் அகதிகளாக அடைக்கலம் தேடி வரத் தொடங்கி இருக்கின்றனர்.

கேஸ் தட்டுப்பாடு அதிகரித்து இருப்பதால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். திரிகோணமலை, நுவரெலியா பகுதிகளில் பல மணி நேரம் கேஸ் வாங்க காத்திருந்தும் கிடைக்காததால் மக்கள் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன், "கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து இருக்கும் இந்த சூழலிலும் இலங்கை அரசு இனப் பிரிவினைவாதத்தை கைவிடாமல் இருக்கிறது. ஈழப்போரின்போது முள்ளிவாய்க்காலில் கஞ்சிக்காக வரிசையில் நின்றுகொண்டு இருந்த குழந்தைகளை இலங்கை ராணுவம் குண்டுகளை வீசி கொன்று குவித்தது. கர்ப்பிணிகள், தாய்மார்கள், பெண்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர்.
இன்று இலங்கையின் மொத்த படைகளையும் வைத்து இருக்கும் இலங்கை அரசை நடத்தி வரும் கோத்தபய ராஜபக்ஷே மற்றும் மகிந்த ராஜபக்ஷே அரசு இத்தகைய கொடூரமான காரியங்கள் எல்லாம் நிகழ்த்தியக் காட்டியது. அன்று ஈழத் தமிழர்களுக்கு செய்த கொடூரத்திற்கான கர்மவினையை தான் இன்று இலங்கை அரசாங்கம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறது. இந்த கர்மவினை உங்களைதான் சூழ்ந்து இருக்கிறது.
அதே நேரம் எங்கள் அன்பான சிங்கள மக்கள் துயரப்படுவதையும், உணவின்றி தெருக்களில் நிற்பதையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் நிலையை எண்ணி வேதனைப்படுகிறோம்." எனக் கூறினார்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications