Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது ஒரு லிட்டர் பெட்ரோல் 338 ரூபாயா? உச்சகட்ட கோபத்தில் இலங்கை மக்கள்! இன்னொரு சோமாலியா ஆகிறதா?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு : இலங்கை அரசுக்கு சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) இலங்கை ரூபாயின் வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வினால் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக கூறி, திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 338 ரூபாயாகவும், டீசலை 289 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது அந்நாட்டு மக்களை உச்சகட்ட கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

1948ல் பிரிட்டன் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தீவு முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது.

இலங்கை விவகாரம்

இலங்கை விவகாரம்

பொருளாதாரக் கொள்கைகளை தவறாக நிர்வகித்ததால் தான் இலங்கை நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகக் கூறி கோத்தபய ராஜபக்ச அரசாங்கத்திற்கெதிராக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தின் தோல்வி காரணமாக பதவி விலகுமாறு கோரி இளைஞர்கள், மக்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வு

எரிபொருள் விலை உயர்வு

டாலர் தட்டுப்பாடு எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீட்டிக்கப்பட்ட மின்வெட்டுக்கு வழிவகுத்த நிலையில், உற்பத்தி மற்றும் போக்குவரத்து தொடர்பான பல தொழில்களை முடக்கியதால், தற்போதும் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 338 ரூபாயாகவும், டீசலை 289 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது. ஷெட்களில் எரிபொருள் வேகமாக வெளியேறுவதைத் தடுக்க, பம்பில் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு விற்பனையை மட்டுப்படுத்த, கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகத்தையும் இது நீக்கியுள்ளது.

ஒரு லிட்டர் 338 ரூபாய்

ஒரு லிட்டர் 338 ரூபாய்

சமீபத்திய விலை உயர்வின் மூலம், பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒக்டேன் 92 எனப்படும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 33.1 சதவீதம் அதிகரித்து 338 ரூபாயாகவும் சாதனை படைத்துள்ளது. அதே நேரத்தில் ஆட்டோ டீசல் 64.2 சதவீதம் அதிகரித்து 289 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பிரிவான லங்கா ஐஓசியின் விலைகளுக்கு இணையாக உள்ளது. Octance 95 ஆனது LIOCஇல் 367 ரூபாயை விட 373 ரூபாயாக உயரும். ஆக்டேன் 95 எரிபொருள் பொதுவாக லாபத்தில் விற்கப்படுகிறது. பொதுவாக லாபம் தரும் சூப்பர் டீசல் 329 ஆக உயர்த்தப்பட்டது.

Recommended Video

    Reason for Sri Lanka Economic Crisis Explained | OneIndia Tamil
    பலத்த நஷ்டம்

    பலத்த நஷ்டம்

    மார்ச் 7 அன்று மத்திய வங்கி மாற்று விகிதத்தை அறிவித்ததில் இருந்து, இலங்கை ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் சரிந்து சுமார் 340 ரூபாயாக உள்ளது. லங்கா ஐஓசி விலை அதிகமாக இருந்ததால் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சிபெட்கோவை நோக்கி திரும்பியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில சிபெட்கோ பெட்ரோல் பங்குகள் எரிபொருள் தீர்ந்து போனது. சிபெட்கோவின் தலைவர் சுமித் விஜேசிங்க, ஏப்ரல் 11 அன்று, அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையால் ஒரு நாளைக்கு 800 முதல் 1000 பில்லியன் ரூபாய் வரை நஷ்டம் அடைந்து வருவதாகக் கூறிய விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+