இலங்கையில் மீண்டும் ஊரடங்கு? அதிபர் தேர்தலுக்கு இடையே அதிகாரிகள் எடுத்த முக்கிய முடிவு.. என்னாச்சு?
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று தேர்தல் முடிவடைந்த பிறகு இரவு 9 மணிக்கு ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இத்தகைய சூழலில் தான் தேர்தல் முடிவுக்கு பிறகு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தல் இன்று நடந்து வருகிறது. நாடு முழுவதும் பொதுமக்கள் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்நிலையில் தான் இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் மக்கள் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிபர் வேட்பாளராக மொத்தம் 38 பேர் போட்டியிட்டுள்ளனர். இலங்கையின் தற்போது இடைக்கால அதிபராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுர குமார திஸனநாயகே, எதிர்க்கட்சி தலைவராக உள்ள எஸ்ஜேபி எனும் சமாகி ஜன பலவேகய கட்சியின் சஜித் பிரேமதாசா, எஸ்எல்பிபி கட்சி சார்பில் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே, ஈழத்தமிழர் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் ஆகியோர் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. இன்று மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு இரவு 9 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். அதன்பிறகு நாளை மதியத்துக்குள் இலங்கையின் புதிய அதிபர் யார்? என்பது தெரிந்துவிடும். இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசா அல்லது அனுர குமார திஸனநாயகே வெல்லலாம் என்று சொல்லப்படுகிறது.
இதில் சஜித் பிரேமதாசாவுக்கு நம் நாட்டின் ஆதரவு உள்ளது. அனுர குமார திஸனநாயகேவுக்கு சீனாவின் சப்போர்ட் உள்ளது. இதனால் இந்த தேர்தல் இலங்கை மட்டுமின்றி நம் நாட்டுக்கும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் இலங்கை தேர்தல் ஆணையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தல் ஆணையர்கள் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் தேர்தலுக்கு நடுவே நடந்தது. இந்த கூட்டத்தில் நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம், தேர்தல் கள சூழல் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
இலங்கையில் தற்போது அதிபர் தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது. தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று இரவு 9 மணிக்கு தொடங்கும். தேர்தல் முடிவை சுமூகமாக அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்பு தேவை என்றால் நாடு முழுவதும் ஊரடங்கு என்பது அமல்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் இலங்கையில் அமைதியாக தேர்தல் நடந்து வருகிறது. சில இடங்களில் தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் கலவரம், பூத்துகளை கைப்பற்றுவது உள்ளிட்ட சம்பவங்கள் எங்கும் பதிவாகவில்லை. இருப்பினும் கூட தேர்தல் முடிவுக்கு பிறகு பிரச்சனைகள் வராமல் தடுப்பது பற்றி அதிகாரிகள் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு தேவைப்பட்டால் ஊரடங்கு நடவடிக்கையை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications