இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சி- கோத்தபாய, மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி தொடர் போராட்டம்
கொழும்பு: இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கை முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.
கொரோனா பாதிப்பால் இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்தது. கொரோனா பரவலால் இலங்கையின் சுற்றுலாதுறை கடும் சரிவை எதிர்கொண்டது. இலங்கைக்கான அன்னிய செலாவணி வரத்து முற்றிலும் தடைபட்டுப் போனது.இலங்கையின் பண மதிப்பும் படு வீழ்ச்சி கண்டது.

விலைவாசி உயர்வு
இலங்கையில் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டி நிற்கிறது. ஒரு முட்டையின் விலை ரூ30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ உருளைக் கிழங்கு ரூ300க்கும் 1 கிலோ பருப்பு ரூ250க்கும் ஒரு கிலோ சர்க்கரை ரூ250க்கும் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். இலங்கையில் சமையல் எரிவாயு கப்பல்களுக்கு பணல் செலுத்த முடியாததால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களும் விறகு அடுப்புக்கு மாறி வருகின்றனர்.

கொழும்பில் பிரமாண்ட போராட்டம்
இந்த நிலையில் தலைநகர் கொழும்பில் கோத்தபாய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரி எதிர்க்கட்சியின் பிரமாண்டமான போராட்டம் நடத்தினர். இதில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் போது கோத்தபாய, மகிந்த மற்றும் பசில் ராஜபக்சேக்களுக்கு படங்களை தீயிட்டும் கொளுத்தினர். ரொட்டி துண்டுகளை கைகளில் ஏந்தி கோத்தபாய ராஜபக்சேவே வீட்டுக்கு போ என முழக்கமிட்டனர்.

தொடர் போராட்டம்
இதேபோல் பல இடங்களில் பொதுமக்கள், ராஜபக்சேக்கு அரசுக்கு எதிராக தன்னெழுச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கையில் மின்வெட்டும் அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் மின்வெட்டு காரணமாகவும் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர். அத்துடன் சமூக வலைதளங்களில் GohomeGota என்ற ஹேஷ்டேக் மூலமும் ராஜபக்சேக்கள் அரசுக்கு எதிராக இலங்கை நாட்டு மக்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியா உதவி
இந்த நிலையில் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக இந்தியா ரூ7,500 கோடி கடனுதவி வழங்கி உள்ளது. டெல்லியில் இது தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இலங்கைக்கு ரூ7500 கோடி கடனுதவி வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications