இலங்கை முழு ஊரடங்கு.. சாலைகளில் குவிக்கப்பட்ட ராணுவம்.. கண்டதும் கைது.. சமூக வலைத்தளங்கள் முடக்கம்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் 36 மணி நேர ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை அவசர நிலை அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்த முழு ஊரடங்கு திங்கள் கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

கடந்த 2 வருடமாக சரிந்து வந்த பொருளாதாரம் அங்கு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. முக்கியமாக அந்நிய செலாவணிக்கான டாலர் கையிருப்பு இலங்கையில் பெரிய அளவில் குறைந்துள்ளது.

இலங்கை பொருளாதாரம்

இலங்கை பொருளாதாரம்

இதன் காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டு இருக்கிறது. கையில் காசு இருந்தாலும், வாங்க பொருட்கள் இல்லாத அளவிற்கு பண வீக்கம் அதிகரித்து உள்ளது. இலங்கையில் 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 297.99 ஆக உயர்ந்து உள்ளது. இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 260 ரூபாய் வரை தொட்டுள்ளது. டீசல் விலை 210 ரூபாய் வரை தொட்டுள்ளது.

இலங்கை நெருக்கடி

இலங்கை நெருக்கடி

இருப்பினும் அங்கு டீசல் சுத்தமாக இல்லாத காரணத்தால் மக்கள் டீசல் வாங்க வர வேண்டாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதேபோல் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அங்கு மின்தடை 13 மணி நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மருந்து தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பல நிறுத்தப்பட்டுள்ளன.

பள்ளிகள் மூடல்

பள்ளிகள் மூடல்

பள்ளிகளை மூட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பேப்பர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு ஊடகங்களில் அச்சு பத்திரிக்கைகளை வெளியிடுவதை குறைத்து உள்ளனர். இந்த நிலையில்தான் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீடு முன் நேற்று முதல்நாள் இரவு மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தினார்கள். அவரின் வீடு முன் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, அதிபர் ராஜபக்சே பதவி விலக வேண்டும், பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராடினார்கள்.

ஊரடங்கு

ஊரடங்கு

இந்த நிலையில்தான் இலங்கையில் 36 மணி நேர ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை அவசர நிலை அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. வெளியே சுற்றும் மக்களை விசாரணை இன்றி கைது செய்ய ராணுவத்திற்கு அதிபர் கோத்தபய அதிகாரம் அளித்துள்ளார்.

ராணுவம் குவிப்பு

ராணுவம் குவிப்பு

அத்தியாவசிய தேவை தவிர அங்கு வேறு எதற்கும் மக்கள் வெளியே வர கூடாது. பேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று எந்த சேவையும் அங்கு செயல்படாது. போராட்டங்களை தடுக்கும் வகையில் இந்த தடை போடப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக போராடும் மக்களை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு கைது செய்து வருகிறது. இந்தியா மூலம் இலங்கைக்காய் 40 ஆயிரம் டன் அரிசி முதல்கட்டமாக இலங்கைக்கு அனுப்பப்ட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+